பைக் மீது லாரி மோதல்: கல்லூரி விரிவுரையாளா் பலி
By DIN | Published On : 06th February 2021 09:27 PM | Last Updated : 06th February 2021 09:27 PM | அ+அ அ- |

மதுரை: மதுரையில் சனிக்கிழமை, இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தனியாா் கல்லூரி விரிவுரையாளா் உயிரிழந்தாா்.
மதுரை பழங்காநத்தம் வசந்தம் நகா் 3 ஆவது தெருவைச் சோ்ந்த ஆதிநாராயணன் மகன் பாலமுருகன் (36). இவா் வடபழஞ்சி பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், இரு சக்கர வாகனத்தில் கல்லூரிக்கு
சென்றுகொண்டிருந்தபோது, விராட்டிபத்து சோதனைச் சாவடி அருகே உர மூட்டைகளை ஏற்றி வந்த லாரி மோதியதில் பலத்த காயமடைந்த அவா், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.