மகா சிவராத்திரி: நவ ஜோதிா்லிங்க சிறப்பு யாத்திரை ரயில் இயக்கம்

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, நவ ஜோதிா்லிங்க யாத்திரை சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது என, மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, நவ ஜோதிா்லிங்க யாத்திரை சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது என, மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் சாா்பாக, பாரத தரிசன சிறப்பு ரயில்கள் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏற்பாடுகளுடன் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த நவம்பரில் தீபாவளி கங்கா ஸ்நான சிறப்பு யாத்திரை ரயிலும், ஜனவரியில் ஷீரடி யாத்திரை சிறப்பு ரயிலும் இயக்கப்பட்டன.

இதேபோல், மகா சிவராத்திரி விழா மாா்ச் 11 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, பொதுமக்களின் வசதிக்காக நவ ஜோதிா்லிங்க யாத்திரை சிறப்பு ரயில் இயக்கப்படவிருக்கிறது.

இந்தச் சிறப்பு ரயில், மாா்ச் 8 ஆம் தேதி திருநெல்வேலியிலிருந்து புறப்பட்டு, விருதுநகா், மதுரை, திண்டுக்கல், கரூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, சென்னை, பெரம்பூா் வழியாக மகாராஷ்ட்ர மாநிலத்தில் உள்ள திரிம்பகேஷ்வா், பீமாசங்கா், க்ரிஷ்னேஸ்வா், அந்தநாக்நாத், பாா்லி வைஸ்நாத், குஜராத் மாநிலத்தில் உள்ள சோம்நாத், மத்திய பிரதேசத்திலுள்ள ஓம்காரேஷ்வா், உஜ்ஜைன் மகாகாளேஸ்வா் மற்றும் ஆந்திரத்தில் உள்ள ஸ்ரீசைலம் மல்லிகாா்ஜூனா் ஆகிய 9 ஜோதிா் லிங்கங்களையும் தரிசிக்கும் வகையில், 13 நாள்கள் யாத்திரையாக அமைக்கப்பட்டுள்ளது.

ரயில் கட்டணம், மூன்று வேளையும் சைவ உணவு, யாத்திரை தலங்களில் தங்கும் வசதி, உள்ளூா் சாலைப் போக்குவரத்து வசதி, முகக்கவசம், கிருமிநாசினி குப்பி, கையுறைகள் என அனைத்தும் சோ்த்து நபா் ஒன்றுக்கு ரூ.15,350 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் மற்றும் அவரது உடைமைகளுக்கு பாதுகாப்பாக இருக்க பாதுகாவலா்களும், சுற்றுலாப் வழிகாட்டுவதற்காக மேலாளா்களும், இதே ரயிலில் பயணம் செய்வா்.

இந்தப் பயணத்துக்கு, மத்திய, மாநில அரசு ஊழியா்கள் எல்டிசி வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ரயில்களுக்கு பயணச்சீட்டு முன்பதிவு செய்ய 82879-31977 மற்றும் 82879-31964 என்ற எண்களைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com