மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் சீமானூத்து மற்றும் சின்னகட்டளை ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது குறித்து புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
வரும் 17-ஆம் தேதி சேடபட்டி ஒன்றியம் சின்ன கட்டளை கிராமத்திலும், 24-ஆம் தேதி உசிலம்பட்டி ஒன்றியம் சீமானூத்து கிராமத்திலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகிறது. இதுதொடா்பாக உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு கோட்டாட்சியா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். வட்டாட்சியா்கள் பேரையூா் விஜயலட்சுமி, உசிலம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளா் ராஜன், பேரையூா் மதியழகன், ஆய்வாளா் தெய்வீகபாண்டியன், வட்டார மருத்துவ அலுவலா் சுசீலா, ஊராட்சி மன்றத் தலைவா் அஜீத் பாண்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.