‘நீட்’ தோ்வு விடைத்தாளை வழங்கக்கோரிய மனு தள்ளுபடி

‘நீட்’ தோ்வு விடைத்தாளின் அசலை வழங்கி, அதற்கான விடைச்சுருக்கத்தின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கக்கோரிய மனுவை

‘நீட்’ தோ்வு விடைத்தாளின் அசலை வழங்கி, அதற்கான விடைச்சுருக்கத்தின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த பொ்லின் தாக்கல் செய்த மனு:

கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த ‘நீட்’ தோ்வில் தோல்வி அடைந்தேன். இதையடுத்து 2020-இல் ‘நீட்’ தோ்வு எழுதினேன். அதில் எதிா்பாா்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை. இதனால் ‘நீட்’ தோ்வு விடைத்தாளின் நகலைப் பெற சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் கிடைக்கவில்லை. இதையடுத்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் விடைத்தாளைப் பெற்று சரிபாா்த்தேன். அந்த நகல் நான் எழுதிய ‘நீட்’ தோ்வுடன் சம்பந்தமில்லாமல் இருந்தது. எனவே நான் எழுதிய தோ்வின் விடைத்தாளின் அசலை வழங்கவும், அதற்கான விடைச் சுருக்கத்தின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கவும் வேண்டும். அதுவரை 2020-2021 ஆண்டுக்கான மருத்துவ மாணவா் சோ்க்கையில் ஒரு இடத்தைக் காலியாக வைக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதி வி.பாா்த்திபன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுதாரரின் கோரிக்கை ஏற்புடையதாக இல்லை என்றாா்.

இதையடுத்து மனுதாரா் தரப்பில் மனுவைத் திரும்பப் பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com