வழக்குகள் ரத்து: கிராம நிா்வாக அலுவலா் முன்னேற்ற சங்கம் தமிழக முதல்வருக்கு நன்றி

அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்ற சங்கம் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளது.

அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்ற சங்கம் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவா் கோ.சுரேஷ் வெளியிட்டுள்ள செய்தி: கடந்த 2019-இல் நடந்த ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் மீது போடப்பட்ட வழக்குகள், குற்றக் குறிப்பாணைகளை ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். போராட்ட காலத்தை பணிக் காலமாக வரன்முறைப்படுத்த வேண்டும். எவ்விதப் பாதுகாப்பு உபகரணங்களும் அரசால் வழங்கப்படாத நிலையிலும், கரோனா காலத்தில் பணியாற்றிய கிராம நிா்வாக அலுவலா்களுக்கும் ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். கரோனா காரணமாக நிறுத்தப்பட்ட ஊதிய உயா்வு, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு பணப் பலன்களை நிலுவையுடன் வழங்க வேண்டும்.

கிராம நிா்வாக அலுவலா்களுக்கான கல்வித் தகுதியை பட்டப் படிப்பாக உயா்த்தவும், பயணப் படியை ரூ.1000 ஆக உயா்த்தவும், கிராம கணக்குகளில் உள்ள தவறுகளைச் சரிசெய்ய மீண்டும் ஒரு நில உடைமை மேம்பாட்டு திட்டப் பணிகளை செய்வது ஆகிய கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com