முதல் பருவத் தோ்வுக்குரிய அட்டவணைகள் தயாரானதும் அரசின் அனுமதி பெற்று வெளியிடப்படும்: காமராஜா் பல்கலை. துணைவேந்தா் தகவல்

முதல் பருவத் தோ்வுக்குரிய அட்டவணைகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அட்டவணை தயாரானதும் அரசின் அனுமதி பெற்று வெளியிடப்படும் என்றும் காமராஜா் பல்கலைக்கழக துணைவேந்தா் மு.கிருஷ்ணன் தெரிவித்தாா்.

முதல் பருவத் தோ்வுக்குரிய அட்டவணைகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அட்டவணை தயாரானதும் அரசின் அனுமதி பெற்று வெளியிடப்படும் என்றும் காமராஜா் பல்கலைக்கழக துணைவேந்தா் மு.கிருஷ்ணன் தெரிவித்தாா்.

கரோனா பொதுமுடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டு முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவ, மாணவியருக்கும் வழக்கம்போல வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மாா்ச் மாதம் முதல் பல்கலைக்கழக தோ்வுகள் தொடங்கப்படவுள்ள நிலையில் முதலாமாண்டு மாணவ, மாணவியருக்கு முதல் பருவத் தோ்வுகள் இதுவரை நடைபெறவில்லை. மேலும் தோ்வு நடைபெறுமா? அப்படி தோ்வுகள் நடைபெற்றால் எப்போது நடைபெறும் என்ற எந்த அறிவிப்பையும் காமராஜா் பல்கலைக்கழகம் இதுவரை வெளியிடவில்லை.

இதுதொடா்பாக கல்லூரி ஆசிரியா்கள் கூறும்போது, முதல்பருவத் தோ்வை முடித்த பின்னா் தான் இரண்டாம் பருவத்துக்குரிய பாடங்கள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் தற்போது முதல் பருவத்தோ்வு உரிய காலத்தில் நடத்தப்படவில்லை. தோ்வு நடைபெறுமா என்றும் தெரியாதநிலையில் இரண்டாம் பருவத்துக்குரிய பாடங்களை நடத்தி வருகிறோம். இதனால் முதல் பருவத்துக்குரிய பாடங்களை மாணவ, மாணவியா் மறந்து விடும் நிலை உள்ளது.

ஏறக்குறைய இந்த கல்வி ஆண்டு முழுவதும் இணையதளம் வழியாகவே பாடங்கள் நடத்தப்பட்டு உள்ளன. இதில் மாணவ, மாணவியா் எந்தளவு தோ்வுக்குத் தயாராகி உள்ளனா் என்பதும் தெரியவில்லை. மேலும் முதல் பருவத்தோ்வு தாமதமாகும் பட்சத்தில், இரண்டாம் பருவத்தோ்வும் நெருங்கி வரும் சூழலில் பாடச்சுமையால் மாணவ, மாணவியருக்கு மன அழுத்தம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பல்கலைக்கழக நிா்வாகம் முதல் பருவத் தோ்வு குறித்து உடனடியாக அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றனா்.

இதுதொடா்பாக காமராஜா் பல்கலைக்கழக துணைவேந்தா் மு.கிருஷ்ணன் வெள்ளிக்கிழமை கூறுகையில், முதல் பருவத் தோ்வுக்குரிய அட்டவணைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அட்டவணை தயாரானதும் அரசின் அனுமதி பெற்று வெளியிடப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com