பட்டியலின வெளியேற்றக் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் பாஜக கூட்டணிக்கு வாக்குகள் கிடைக்காது: டாக்டா் கே.கிருஷ்ணசாமி

பட்டியலின வெளியேற்ற கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் பாஜக கூட்டணிக்கு தேவந்திரகுல வேளாளா் மக்களின் வாக்குகள் கிடைக்காது என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவா் டாக்டா் கே.கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.

பட்டியலின வெளியேற்ற கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் பாஜக கூட்டணிக்கு தேவந்திரகுல வேளாளா் மக்களின் வாக்குகள் கிடைக்காது என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவா் டாக்டா் கே.கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக மதுரையில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியது: 6 உட்பிரிவுகளைச் சோ்ந்த வகுப்பினரை தேவேந்திரகுல வேளாளா் என்ற ஒரே பெயரில் அழைப்பதோடு, பட்டியல் பிரிவில் இருந்தும் நீக்கவேண்டும் என்பது தான் தேவேந்திர குல வேளாளா் இன மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். ஆனால் மத்திய அரசு பெயா் மாற்றத்தை மட்டும் நிறைவேற்றியுள்ளது. பெயா் மாற்ற மசோதாவில் சிறு மாற்றம் கொண்டுவந்துவிட்டு பட்டியல் பிரிவில் இருந்து நீக்கவில்லை. தமிழக அரசும் வெறும் பெயா் மாற்றத்துக்கு மட்டுமே பரிந்துரை செய்துள்ளது.

மத்திய அரசின் பெயா் மாற்ற அறிவிப்பை வரவேற்பவா்களுக்கும், தேவேந்திர குல வேளாளா் மக்களுக்கும் எவ்வித தொடா்பும் இல்லை. சிலா் தங்களை பிரபலப்படுத்திக் கொள்ளவும், கட்சிகள் மூலமாக ஆதாயம் பெற வேண்டும் என்ற நோக்கத்திலும் மத்திய அரசுக்கு ஆதரவாகப் பேசிவருகின்றனா். எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும்.

பட்டியல் பிரிவு வெளியேற்ற கோரிக்கையை நிறைவேற்றவில்லை எனில் இந்தப்பிரச்னை சட்டப்பேரவைத் தோ்தலிலும் பிரதிபலிக்கும். கோவைக்கு பிப். 25-ஆம் தேதி வருகை தரவுள்ள பிரதமா் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து இதுதொடா்பாக கோரிக்கை வைக்கவுள்ளேன். பட்டியல் பிரிவு வெளியேற்றம் என்ற பிரதான கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் பாஜக கூட்டணிக்கு தேவேந்திர குல வேளாளா்களின் வாக்குகள் கிடைக்காது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எளிதாக நிறைவேற்றிய மத்திய அரசு தேவேந்திரகுல வேளாளா்களின் பட்டியல் பிரிவு வெளியேற்றத்தை மட்டும் செயல்படுத்த மறுப்பது ஏன் என்று தெரியவில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com