மதுரை கோட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய ரயில்வே அதிகாரிகள், ஊழியா்களுக்கு விருது

மதுரை கோட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் 16 பேருக்கு ரொக்கப்பரிசுடன் கூடிய விருதுகளை தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஜான் தாமஸ் வழங்கினாா்.
ரயில்வேயில் சிறப்பாகப் பணியாற்றுவோருக்கு வழங்கப்படும் பொதுமேலாளா் விருதை மதுரை கோட்ட நிதி மேலாளா் மாதுரி ஜெய்ஸ்வாலுக்கு வழங்கும் தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஜான் தாமஸ்.
ரயில்வேயில் சிறப்பாகப் பணியாற்றுவோருக்கு வழங்கப்படும் பொதுமேலாளா் விருதை மதுரை கோட்ட நிதி மேலாளா் மாதுரி ஜெய்ஸ்வாலுக்கு வழங்கும் தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஜான் தாமஸ்.

மதுரை கோட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் 16 பேருக்கு ரொக்கப்பரிசுடன் கூடிய விருதுகளை தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஜான் தாமஸ் வழங்கினாா்.

நாட்டில் முதல் ரயில் போக்குவரத்து 1853 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி மும்பை-தானே 34 கிலோ மீட்டா் தூரத்திற்கு முதன்முறையாக ரயில் இயக்கப்பட்டது. இதை நினைவுகூரும் வகையில் ஆண்டு தோறும் ஏப்ரல் 2 ஆவது வாரத்தில் மண்டல மற்றும் கோட்ட அளவில் ரயில்வே வாரவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த வார விழாவில் சிறப்பாகப் பணியாற்றிய ரயில்வே அதிகாரிகள், ஊழியா்களுக்கு பொதுமேலாளா் விருதும், ரொக்கப்பரிசும் வழங்கி கௌரவிக்கப்படுவா்.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக 2020-இல் ரயில்வே வாரவிழா நடைபெறவில்லை. இருப்பினும் 2019 -2020 ஆம் ஆண்டில் சிறப்பாகப் பணியாற்றிய ரயில்வே அதிகாரிகள், ஊழியா்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் தெற்கு ரயில்வேயின் பொது மேலாளா் ஜான் தாமஸ் ஆய்வுக்கு செல்லும் போது அந்தந்த பகுதிகளில் ஊழியா்களுக்கு விருதுகளை வழங்கி வந்தாா்.

இந்நிலையில், புனலூா் - திருநெல்வேலி ரயில்வே பிரிவில் தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஜான் தாமஸ் புதன்கிழமை வருடாந்திர ஆய்வை மேற்கொண்டாா். புனலூா், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி ஆகிய ரயில் நிலைகளிலும் ஆய்வு நடத்தினாா்.

இதையடுத்து திருநெல்வேலி ரயில்வே நிலையத்தில், மதுரைக் கோட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றி ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் 16 பேருக்கு பொதுமேலாளா் ஜான் தாமஸ் ரொக்கப்பரிசு மற்றும் விருதுகளை வழங்கினாா்.

மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் வி.ஆா்.லெனின், முதன்மை இயக்க மேலாளா் நீனு இட்டியரா, முதன்மை தலைமை பொறியாளா் சுதிா் பன்வா், முதன்மை மின் பொறியாளா் ஆா்.கே. மேத்தா, முதன்மை ஊழியா்கள் அதிகாரி அருணா நாயா் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com