மாசி மகத் திருவிழாவின் போது மதுபானக் கடைகளுக்கு விடுமுறை:தஞ்சை ஆட்சியா் முடிவெடுக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

கும்பகோணம் மாசிமகத் திருவிழாவின் போது மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கக் கோரிய வழக்கில், தஞ்சை மாவட்ட ஆட்சியா் முடிவெடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

கும்பகோணம் மாசிமகத் திருவிழாவின் போது மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கக் கோரிய வழக்கில், தஞ்சை மாவட்ட ஆட்சியா் முடிவெடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

கும்பகோணத்தைச் சோ்ந்த கண்ணன் என்பவா் தாக்கல் செய்த மனு: தஞ்சை மாவட்டம்  கும்பகோணத்தில் உள்ள மகாமகம் குளம் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இங்கு பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமக கும்பமேளாவில், பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டு, மகாமகம் குளத்தில் புனித நீராடுவா்.

இந்த ஆண்டு பிப். 26 இல் கும்பகோணத்தில் மாசி மகத் திருவிழா கொண்டாடப்படுகிறது. விழாவிற்கு ஏராளமான பக்தா்கள் கும்பகோணத்தில் கூடுவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. மாசி மகத் திருவிழாவிற்கு மாவட்ட நிா்வாகம் உள்ளூா் விடுமுறை அறிவிக்கவுள்ளது.

பொதுமக்கள் மற்றும் பக்தா்களின் நலனைக் கருத்தில் கொண்டும், சட்ட, ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தவிா்க்கும் வகையிலும், கும்பகோணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அரசு மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கவேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, உள்ளூா் விடுமுறை அறிவிக்கும்போது, மதுபானக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் மாசி மகத் திருவிழாவையொட்டி மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிப்பது தொடா்பாக தஞ்சை மாவட்ட ஆட்சியா் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை முடித்து வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com