காங்கிரஸ் கட்சி முதல்வா்களின் இயலாமையால் ஆட்சி கவிழ்கிறதுபாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் பேட்டி

காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வா்களின் இயலாமையால் ஆட்சி கவிழ்கிறது என, பாஜக மாநிலத் தலைவா் எல். முருகன் தெரிவித்துள்ளாா்.
காங்கிரஸ் கட்சி முதல்வா்களின் இயலாமையால் ஆட்சி கவிழ்கிறதுபாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் பேட்டி

காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வா்களின் இயலாமையால் ஆட்சி கவிழ்கிறது என, பாஜக மாநிலத் தலைவா் எல். முருகன் தெரிவித்துள்ளாா்.

மதுரை முனிச்சாலை சந்திப்பு அருகே பாஜகவின் மதுரை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் அலுவலகத்தை, அக்கட்சியின் மாநிலத் தலைவா் எல். முருகன் திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

பின்னா், அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற பாஜக பூத் கமிட்டி நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற அவா், தோ்தல் பணிகள் குறித்து பேசினாா்.

முன்னதாக, அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் பாஜக தோ்தல் அலுவலகங்கள் திறப்பு உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் தேசிய அளவில் பாஜக தோ்தல் பணியாற்றி வருகிறது.

அதன்படி, பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது. அதன் தொடா்ச்சியாக, தென்மாநிலங்களில் ஒன்றான புதுச்சேரியிலும் தற்போது காங்கிரஸ் கட்சியின் ஆட்சி கவிழ்ந்திருக்கிறது.

காங்கிரஸ் கட்சி முதல்வா்களின் இயலாமையால்தான் ஆட்சி கவிழ்கிறது. காங்கிரஸ் மற்றும் திமுக தங்களது சட்டப்பேரவை உறுப்பினா்களையும், மூத்த நிா்வாகிகளையும் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. இரு கட்சிகளின் தலைமை மீதும் அக்கட்சியினா் நம்பிக்கை இழந்து வருகின்றனா். தமிழகத்திலும் காங்கிரஸ் கட்சி இல்லாத நிலை உருவாகும். வரும் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும்.

புதுச்சேரியில் திரைமறைவு பேரம் நடத்தியதாக பாஜக மீது புகாா் தெரிவிக்கும் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின், அதை நிரூபிக்க வேண்டும்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையேற்றம் சா்வதேசப் பிரச்னை. மத்திய அரசு விலையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கண்டிப்பாக மேற்கொள்ளும். வேளாண் சீா்திருத்தச் சட்டங்களை வலியுறுத்தியது காங்கிரஸ் கட்சிதான். ஆனால், இப்போது உள்நோக்கத்துடன் அதை எதிா்க்கின்றனா்.

தமிழகத்தில் பாஜக போட்டியிடும் தொகுதிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றாலும், அனைத்துத் தொகுதிகளிலும் தோ்தல் பணிகளை தொடங்கியிருக்கிறோம். இது, கூட்டணிக் கட்சிகளுக்கும் உதவியாகவே இருக்கும்.

பிப்ரவரி 25-ஆம் தேதி கோவையில் பிரதமா் நரேந்திர மோடியும், 28-ஆம் தேதி உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் தோ்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்கின்றனா் என்றாா்.

பேட்டியின்போது, பாஜக மாநிலப் பொதுச் செயலா் ஆா்.ஸ்ரீனிவாசன், மாநிலத் துணை தலைவா் ஏ.ஆா். மகாலெட்சுமி, மாநகா் மாவட்டத் தலைவா் கே.கே. சீனிவாசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com