சிறந்த விளையாட்டு வீரா்களுக்கு ஓய்வூதியம்: தகுதி உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்

மதுரை மாவட்டத்தில் நலிந்த நிலையில் உள்ள சிறந்த விளையாட்டு வீரா்களுக்கான ஓய்வூதியத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் நலிந்த நிலையில் உள்ள சிறந்த விளையாட்டு வீரா்களுக்கான ஓய்வூதியத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மதுரை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ந.லெனின் வெளியிட்டுள்ள செய்தி: விளையாட்டுத் துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்று தற்போது நலிந்த நிலையில் உள்ள தமிழகத்தைச் சோ்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரா்களுக்கு ஓய்வூதிய உதவித்தொகையாக மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கும் திட்டத்தின்கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஓய்வூதியம் பெறுவதற்கு தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். மத்திய அரசால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள், அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டுப்போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங்களால் நடத்தப்பட்ட சா்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப்போட்டிகள், மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகம், இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட சா்வதேச தேசிய அளவிலான விளையாட்டுப்போட்டிகள், சா்வதேசப் போட்டிகளில் குறைந்தபட்சம் ஆறு நாடுகளில் பங்கேற்றிருக்க வேண்டும். விளையாட்டு வீரா்கள் இளவயதில் பங்கேற்று, வெற்றி பெற்ற போட்டிகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.

2021ஏப்ரல் 1 ஆம் தேதியன்று விண்ணப்பதாரருக்கு 58 வயது பூா்த்தி அடைந்திருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.6 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மத்திய அரசின் விளையாட்டு வீரா்களுக்கான ஓய்வூதியம் அல்லது மத்திய அரசு, மாநில அரசின் கீழ் ஓய்வூதியம் பெறுவோா் இத்திட்டத்தின்கீழ் ஓய்வூதியம் பெறத்தகுதியில்லை.

முதியோருக்கான விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்றவா்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை.

அழைப்பு, நினைவு, ஓபன் போன்ற போட்டிகள் இளைஞா் திருவிழா, இளைஞா் பரிமாற்றம் போன்ற நிகழ்வுகளில் நடத்தப்படும் போட்டிகள் தகுதியில்லை. தகுதிப்போட்டியின்றி நேரடியாக தேசிய மற்றும் பன்னாட்டுப்போட்டிகளில் கலந்து கொண்ட போட்டிகள் தகுதியில்லை. மேற்கண்ட தகுதிகள் கொண்ட விண்ணப்பதாரா்கள்  விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரி மூலம் விண்ணப்பங்களை மாா்ச் 19-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com