திருமங்கலத்தில் கடைகளில் கெட்டுபோன கோழி இறைச்சி 550 கிலோ பறிமுதல்

திருமங்கலத்தில் இறைச்சிக் கடைகளில் விற்பனைக்கு வைக்கப் பட்டிருந்த கெட்டுப்போன கோழி இறைச்சி 550 கிலோவை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனா்.

திருமங்கலம் நகராட்சி ஆணையா் விநாயகம் உத்தரவின்பேரில் சுகாதார அலுவலா் சுருளிநாதன், ஆய்வாளா் சிக்கந்தா் தலைமையில் நகராட்சி ஊழியா்கள் இறைச்சிக் கடைகளில் புதன்கிழமை திடீா் ஆய்வில் ஈடுபட்டனா். மதுரை, உசிலம்பட்டி சாலைப் பகுதி, சந்தை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில் செய்யப்பட்ட ஆய்வில் கடைகளில் குளிா்சாதனப் பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த கெட்டுப்போன கோழி இறைச்சி 550 கிலோவை நகராட்சியினா் பறிமுதல் செய்தனா். அந்தக் கடைகளுக்கு சீல் வைத்தனா். இறைச்சிகளை பினாயில் ஊற்றி அழித்தனா்.

தொடா்ந்து மளிகை கடைகளில் நடத்திய ஆய்வில் பல கடைகளில் தடைசெய்யப்பட்ட 150 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இறைச்சி மற்றும் மளிகை கடைகளுக்கு ரூ.45 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com