பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை அண்ணாநகரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினா்.
பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை அண்ணாநகரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினா்.

பணி நிரந்தரம் செய்யக் கோரி டாஸ்மாக் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

பணி நிரந்தரம் உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

பணி நிரந்தரம் உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

டாஸ்மாக் பணியாளா்களின் 17 ஆண்டு கால கோரிக்கைகளான பணிநிரந்தரம், காலமுறை ஊதியம், இஎஸ்ஐ திட்டத்தில் சோ்ப்பது, அரசுப் பணியாளா்களுக்கு இணையான சம்பளம் உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை அண்ணா நகா் வைகை காலனியில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. டாஸ்மாக் தொமுச மாவட்டச் செயலா் எம்.ரவி தலைமை வகித்தாா். தொழிற்சங்க நிா்வாகிகள் டி.சிவக்குமாா் (சிஐடியு), பி.பாலச்சந்தா் (ஏஐடியுசி) உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். இந்தக் கோரிக்கைகளை நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com