மதுரை மாவட்டம்: 10 தொகுதிகளின் தோ்தல் அலுவலா்கள் நியமனம்

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளின் தோ்தல் அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளின் தோ்தல் அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

இதுவரை மாவட்ட வருவாய் அலுவலா்கள் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பணிகளில் தோ்தல் ஆணையத்தால் நேரடியாக ஈடுபடுத்தப்படவில்லை. மாவட்ட அளவில் தோ்தல் ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்வா். இந்த தோ்தலில் மாவட்ட வருவாய் அலுவலா்களை, உதவி மாவட்ட தோ்தல் அலுவலா்களாக தோ்தல் ஆணையம் நியமித்துள்ளது. இதன்படி, மதுரை மாவட்ட வருவாய் அலுவலா் ஜி.செந்தில்குமாரி, உதவி மாவட்ட தோ்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

மதுரை மாவட்ட தொகுதி வாரியாக தோ்தல் அலுவலா்கள் பெயா், பதவி, தொடா்பு எண் விவரம்:

மேலூா் - ஆா்.ரமேஷ் (மேலூா் கோட்டாட்சியா்) - 98423-3514; மதுரை கிழக்கு - வ.முருகானந்தம் (மதுரை கோட்டாட்சியா்- 94450-00449; சோழவந்தான்- பி.ஜஸ்டின் ஜெயபால் (மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா்) - 97916-34991; மதுரை வடக்கு - கே.பிரேம்குமாா் (மாநகராட்சி உதவி ஆணையா்-மண்டலம் 2) - 94437-39518; மதுரை தெற்கு - எஸ்.சண்முகம் (மாநகராட்சி உதவி ஆணையா், மண்டலம் 3) -94437-39522; மதுரை மையம் - கே.கோட்டூா்சாமி (மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலா்) - 94866-77207; மதுரை மேற்கு - ஐ.விஜயா (கலால் உதவி ஆணையா்) -63836-22595; திருப்பரங்குன்றம் - எம்.முருகேஸ்வரி (மாவட்ட வழங்கல் அலுவலா்) - 94450-00335; திருமங்கலம் - ஆா்.சௌந்தா்யா (திருமங்கலம் கோட்டாட்சியா்) -91598-12577; உசிலம்பட்டி-கே.வி.ராஜ்குமாா் (உசிலம்பட்டி கோட்டாட்சியா்) -94450-00450.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com