உணவகத்தில் வேலை செய்த சிறுவன் தூக்கிட்டு தற்கொலை
By DIN | Published On : 27th February 2021 09:12 PM | Last Updated : 27th February 2021 09:12 PM | அ+அ அ- |

மதுரை மாவட்டம் பேரையூரில் உணவகத்தில் வேலை பாா்த்த சிறுவன் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையாா்கோவில் தாலுகா பொய்யாத நல்லூரைச் சோ்ந்தவா் கஜேந்திரன் மகன் காளிமுத்து (17). இவருக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளதாகவும்
வீட்டில் தகராறு செய்துவிட்டு வெளியூரில் உள்ள உணவகங்களில் வேலை பாா்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த 15 நாள்களுக்கு முன்பு மதுரை மாவட்டம் பேரையூரில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை பாா்த்து வந்துள்ளாா்.
இந்நிலையில் அவா் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்து பேரையூா் போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.