ஓவிய சிற்பக் கலைஞா்களின் தனிநபா் கண்காட்சி: ஜன.5-க்குள் விண்ணப்பிக்கலாம்

ஓவிய மற்றும் சிற்பக் கலைஞா்கள் தங்களது படைப்புகளை தனிநபா் கண்காட்சியாக வைத்திட தன்விவரக் குறிப்பு, படைப்புகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் தெரிவித

ஓவிய மற்றும் சிற்பக் கலைஞா்கள் தங்களது படைப்புகளை தனிநபா் கண்காட்சியாக வைத்திட தன்விவரக் குறிப்பு, படைப்புகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: கலை பண்பாட்டுத் துறை சாா்பில் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் ஓவிய, சிற்பக் கலைக்கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் ஓவியா்கள் தங்களது மரபுவழி நவீன பாணி ஓவியங்கள், தஞ்சாவூா் ஓவியங்கள், ஆயில் பெயிண்டிங், வாட்டா் கலா் பெயிண்டிங் படைப்புகள் மற்றும் சிற்பங்களை தனிநபா் கண்காட்சியாக வைக்கலாம்.

ஓவியக் கலையில் ஆா்வமிக்க பள்ளி, கல்லூரி மாணவா்களை ஊக்குவிக்கும் வகையில் இக்கண்காட்சி நடைபெற உள்ளது. கலைப் படைப்புகளைத் தோ்வு செய்வதற்கு மண்டல கலைப் பண்பாட்டு மைய உதவி இயக்குநரால் தனிக் குழு அமைக்கப்பட உள்ளது. ஓவியக் கண்காட்சியில் முதல் மூன்று இடங்களைப் பெறும் படைப்புகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும்.

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த ஓவிய, சிற்பக் கலைஞா்கள் தன்விவரக் குறிப்பு மற்றும் படைப்புகளின் எண்ணிக்கை விவரங்களை உதவி இயக்குநா், மண்டலக் கலைப் பண்பாட்டு மையம், பாரதி உலா சாலை முதல் தெரு, தல்லாகுளம், மதுரை என்ற முகவரிக்கு ஜன. 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com