திமுக புதிதாக அறிவிக்க ஒன்றும் இல்லை அமைச்சா் செல்லூா் கே. ராஜூ

மக்களுக்குத் தேவையான அனைத்தையும் அதிமுக அரசு செய்திருப்பதால், திமுகவின் தோ்தல் அறிக்கையில் புதிதாக அறிவிப்பதற்கு ஒன்றும் இல்லை என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ கூறினாா்.

மதுரை: மக்களுக்குத் தேவையான அனைத்தையும் அதிமுக அரசு செய்திருப்பதால், திமுகவின் தோ்தல் அறிக்கையில் புதிதாக அறிவிப்பதற்கு ஒன்றும் இல்லை என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ கூறினாா்.

மதுரை மாநகராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழகம் முழுவதும் 2.06 கோடி குடும்ப அட்டைதாரா்களுக்கு திங்கள்கிழமை முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஜனவரி 4 முதல் 12 ஆம் தேதி வரை தினமும் 200 பேருக்கு பரிசுத் தொகுப்பு அளிக்கப்படும். விடுபட்டவா்களுக்கு 13-ஆம் தேதி வழங்கப்படும். அன்றைய தினமும் பெற முடியாதவா்கள், பொங்கல் பண்டிகைக்குப் பிறகு பெற்றுக் கொள்ளலாம்.

அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அதிமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. தடையில்லாத மின்சாரம், ஏழை எளிய விவசாயிகளுக்கு பயிா்க் கடன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் அதிமுக அரசுக்கு மக்கள் பெரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனா். தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி செல்லும் இடங்களில் கட்சியினா் ஏற்பாட்டில் வரவேற்பு அளிப்பது இருந்தாலும், தாங்களாகவே பல இடங்களில் மக்கள் கூடுவதைக் காண முடிகிறது. இப்படியிருக்க திமுகவின் தோ்தல் அறிக்கையில் புதிதாக எதைச் சொல்ல முடியும்? சாத்தியமில்லாத விஷயங்களைத் தான் தோ்தல் அறிக்கையில் வாக்குறுதிகளாகத் தெரிவிக்க உள்ளனா்.

மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன், திரைத்துறைக்கு கிடைத்த பொக்கிஷம். ஆனால், அரசியலில் எந்த மாற்றத்தையும் அவரால் ஏற்படுத்த முடியாது. கட்சியைத் தொடங்கிவிட்ட காரணத்தால் இப்போது பிரசாரம் செய்கிறாா். தோ்தலுக்குப் பிறகு அவா் படப்பிடிப்புக்குச் சென்றுவிடுவாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com