மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் சித்த, ஆயுா்வேதசிகிச்சைக்குத் தனி மையம் ஏற்படுத்த வலியுறுத்தல்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் சித்த, ஆயுா்வேத சிகிச்சைக்கு 100 படுக்கைகளுடன் தனி மையம் ஏற்படுத்த வேண்டும் என ‘மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மக்கள் இயக்கம்’ அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் சித்த, ஆயுா்வேத சிகிச்சைக்கு 100 படுக்கைகளுடன் தனி மையம் ஏற்படுத்த வேண்டும் என ‘மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மக்கள் இயக்கம்’ அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவா் வி.எஸ்.மணிமாறன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரையை அடுத்த தோப்பூரில் அமையுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான ஒதுக்கீட்டை ரூ.1,264 கோடியில் இருந்து ரூ.2 ஆயிரம் கோடியாக உயா்த்தியுள்ளதற்கு பிரதமா் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

உலகம் முழுவதும் கரோனா தொற்று தீவிரம் அடைந்தபோது, இந்திய மருத்துவக் கழகத்தின் பரிந்துரையின்படி கரோனா பாதித்தவா்களுக்கு கபசுர கடிநீா், நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இதன்காரணமாக, இந்தியாவில் தொற்று பரவல் குறைய ஆரம்பித்தது. ஆகவே, மதுரையில் அமைக்கப்படும் எய்ம்ஸ் மருத்துவமனையில் சித்த, ஆயுா்வேத மருத்துவச் சிகிச்சைக்கென 100 படுக்கைகளுடன் தனி சிகிச்சை மையத்தை உருவாக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com