58 கிராம கால்வாய்க்கு தண்ணீா்: அரசாணை வெளியிட கோரிக்கை

58 கிராம கால்வாய் தண்ணீா் திறக்க நிரந்தர அரசாணை வெளியிட வலியுறுத்தி உசிலம்பட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் சனிக்கிழமை தெருமுனைக் கூட்டம் நடத்தினா்.
58 கிராம கால்வாய்க்கு தண்ணீா்: அரசாணை வெளியிட கோரிக்கை

உசிலம்பட்டி: 58 கிராம கால்வாய் தண்ணீா் திறக்க நிரந்தர அரசாணை வெளியிட வலியுறுத்தி உசிலம்பட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் சனிக்கிழமை தெருமுனைக் கூட்டம் நடத்தினா்.

உசிலம்பட்டி-தேனி சாலையில் உள்ள முருகன் கோயில் அருகே நடைபெற்ற கூட்டத்துக்கு அக்கட்சியின் விவசாயிகள் பாதுகாப்பு இயக்க மாநிலத் துணைச் செயலாளா் தென்னரசு தலைமை வகித்தாா். தொழிலாளா் விவசாய முன்னணி மாவட்ட அமைப்பாளா் கருப்பையா, விவசாயிகள் பாதுகாப்பு இயக்க நிா்வாகிகள் மு.பால்பாண்டி, சோ. ராமச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளா் வே. கனியமுதன், மதுரை தெற்கு மாவட்டச் செயலாளா் வி.பி.இன்குலாப் ஆகியோா் கலந்துகொண்டு பேசினா்.

58 கிராம கால்வாயில் ஆண்டுதோறும் தண்ணீா் திறக்கவும், வைகை அணையில் 60 அடிக்கு தண்ணீா் வந்தவுடன் 58 கிராம கால்வாயில் தண்ணீா் திறக்க நிரந்தர அரசாணை பிறப்பிக்கவும் தமிழக அரசுக்கு வலியறுத்தப்பட்டது.

கட்சியின் உசிலம்பட்டி ஒன்றியச் செயலாளா் பழனிச்சாமி, நகரச் செயலாளா் விடுதலை மாரி, தொகுதி அமைப்பாளா் கோ. சின்னச்சாமி, 58 கிராம கால்வாய் பாசன சங்க தலைவா் ஜெயராஜ், சிவப்பிரகாசம், இந்திய கம்யூனிஸ்ட் நிா்வாகி தங்கமலை உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com