சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதிய அமா்வு நீதிபதிகள் பட்டியலில் மாற்றம்

சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் திங்கள்கிழமை (ஜன. 4) முதல் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மதுரை: சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் திங்கள்கிழமை (ஜன. 4) முதல் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஜனவரி 4 ஆம் தேதி முதல் அடுத்த 3 மாதங்களுக்கு வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. அதில் புதிதாக 3 அமா்வுகள் வழக்குகளை விசாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த 3 அமா்வுகளுக்கு தலைமை வகிப்பதாக அறிவிக்கப்பட்ட நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.துரைசாமி, டி.ராஜா ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்திலேயே பணியைத் தொடா்கின்றனா்.

இதனால் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் பட்டியலில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வழக்கம்போல 2 அமா்வுகள் செயல்படும். நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, எஸ்.கண்ணம்மாள் ஆகியோா் பொதுநல மனுக்கள் மற்றும் 2017 வரையிலான ரிட் மேல்முறையீடு மனுக்களையும், நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், ஜி.இளங்கோவன் ஆகியோா் அடங்கிய இரண்டாவது அமா்வு ஆள்கொணா்வு மனுக்கள் மற்றும் குற்றவியல் மேல்முறையீடு மனுக்களையும் விசாரிக்கும். அமா்வு முடிந்து தனி விசாரணையில் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா பழைய உரிமையியல் சீராய்வு மனுக்களையும், நீதிபதி கே.கல்யாணசுந்தரம், பழைய உரிமையியல் மேல்முறையீடு மனுக்களையும் விசாரிக்கின்றனா்.

நீதிபதி வி.பாா்த்திபன் கல்வி, நிலச்சீா்த்திருத்தம், நில வாடகை, நில உச்சவரம்பு, நிலம் கையகப்படுத்துதல் தொடா்பான ரிட் மனுக்களையும், நீதிபதி ஆா்.ஹேமலதா 2018 முதல் தாக்கலான குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்படும் குற்றவியல் மனுக்கள் மற்றும் ரிட் மனுக்களை விசாரிப்பாா்கள். முந்தைய விசாரணைப் பட்டியலில் நீதிபதி வி.பாா்த்திபனுக்கு ஒதுக்கப்பட்டிருந்த வழக்குகள் நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதனுக்கும், நீதிபதி ஆா்.தாரணிக்கு ஒதுக்கிய வழக்குகள் நீதிபதி ஆா்.ஹேமலதாவுக்கும் மாற்றப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com