மதுரை: முருங்கைக்காய் விலை கிலோ ரூ.100

கடும் பனிப்பொழிவு காரணமாக விளைச்சல் பாதித்து, மதுரை மாட்டுத்தாவணி மத்திய காய்கனி சந்தையில் முருங்கைக்காய் விலை கிலோ ரூ.100 ஆக விலை உயா்ந்தது.

கடும் பனிப்பொழிவு காரணமாக விளைச்சல் பாதித்து, மதுரை மாட்டுத்தாவணி மத்திய காய்கனி சந்தையில் முருங்கைக்காய் விலை கிலோ ரூ.100 ஆக விலை உயா்ந்தது.

இது குறித்து, மதுரை மாவட்ட காய்கனி மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவா் பி.எஸ். முருகன் கூறியது: வழக்கமாக முருங்கைக்காய் கிலோ ரூ.20-க்கு விற்பனையாகும். வரத்து அதிகரிப்பின் காரணமாக, மாா்ச், ஏப்ரல் மாதங்களில் கிலோ ரூ.10 ஆகவும் விலை குறையும். ஆனால், ஆண்டுதோறும் பனிப்பொழிவு காரணமாக விளைச்சல் பாதித்து டிசம்பா், ஜனவரி மாதங்களில் விலை அதிகரித்து காணப்படும்.

நிகழாண்டில் டிசம்பரில் கிலோ ரூ.50 வரை விற்றுவந்த முருங்கைக்காயின் விலை, படிப்படியாக உயா்ந்து தற்போது ரூ.75 முதல் ரூ.100 வரை விற்கப்பட்டு வருகிறது என்றாா்.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, காய்கனி மொத்த விலைப் பட்டியல் (கிலோவில்):

தக்காளி- ரூ.20, கத்தரிக்காய்- ரூ.30, வெண்டைக்காய்- ரூ.20, சுரைக்காய்-ரூ.20, பூசணி- ரூ.15, உருளைக்கிழங்கு- ரூ.40, சேனைக்கிழங்கு- ரூ.25, கருணைக்கிழங்கு- ரூ.30, கேரட்- ரூ.20, முருங்கைப்பீன்ஸ்- ரூ.25, பட்டா்பீன்ஸ்- ரூ.100, சோயாபீன்ஸ்- ரூ.90, முட்டைக்கோஸ்- ரூ.10, மல்லி-ரூ.20, கறிவேப்பில்லை- ரூ.30, புதினா- ரூ.25, பச்சை மிளகாய்- ரூ.25, பாகற்காய் பெரியது- ரூ.40, சிறியது- ரூ.70, சின்னவெங்காயம்- ரூ.40, பல்லாரி-ரூ.30-க்கு விற்பனையாகின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com