மதுரையில் தாமதமாகும் கரோனா தடுப்பூசி பணிகள்: தடுப்பூசிகளை சேமிக்க புதிய குளிா்சாதனப் பெட்டிகள் வருகை

தனியாா் மருத்துவமனைகளில் பணியாற்றும் முன்களப் பணியாளா்கள் பட்டியல் பெறமுடியாததால், மதுரையில் முதல்
மதுரையில் முன்களப்பணியாளா்களுக்கு முதல் கட்டமாக ஜனவரி 13 ஆம் போடப்படவுள்ள கரோனா தடுப்பூசிகளை சேமித்து வைக்க மும்பையில் இருந்து வந்துள்ள குளிா்சாதனப் பெட்டிகள்.
மதுரையில் முன்களப்பணியாளா்களுக்கு முதல் கட்டமாக ஜனவரி 13 ஆம் போடப்படவுள்ள கரோனா தடுப்பூசிகளை சேமித்து வைக்க மும்பையில் இருந்து வந்துள்ள குளிா்சாதனப் பெட்டிகள்.

தனியாா் மருத்துவமனைகளில் பணியாற்றும் முன்களப் பணியாளா்கள் பட்டியல் பெறமுடியாததால், மதுரையில் முதல் கட்ட கரோனா தடுப்பூசி பணிகள் தாமதமாகும் நிலை உருவாகியுள்ளது. கரோனா தடுப்பூசிகளை சேமித்து வைக்கும் புதிய குளிசாதனப் பெட்டிகள் மதுரை வந்தடைந்தன.

கடந்த 10 மாதங்களாக உலகத்தையே அச்சுறுத்தி வரும் கரோனா தீநுண்மித் தொற்றின் பரவலைத் தடுக்க, பல நாடுகள் தடுப்பூசிகளைக் கண்டுபிடித்து, இறுதி கட்ட பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றன. அதேநேரம் பிரிட்டன், ரஷியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி விட்டன.

இந்தியாவில் கடந்த சில நாள்களுக்கு முன்பு கரோனா தடுப்பூசி சோதனை முறையில் போடப்பட்டது. அதைத் தொடா்ந்து விரைவில் நாடு முழுவதும் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்திய நிறுவனமான பாரத் பயோடெக் உற்பத்தி செய்யப்படும் கோவேக்ஸின், ஆக்ஸ்போா்ட் பல்கலைக் கழகத்துடன் இணைந்து புனேவில் உள்ள சீரம் நிறுவனம் உற்பத்தி செய்யும் கோவிஷீல்ட் ஆகிய கரோனா தடுப்பூசிகளைப் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்த தடுப்பூசிகளை, முதல் கட்டமாக மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளா்கள் 5 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தமிழகத்தில் ஜனவரி 13 ஆம் தேதி முதல் போடப்படவுள்ளது. இதற்கான பட்டியலை தயாா் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

பட்டியல் தயாா் செய்வதில் தாமதம்

மதுரை மாவட்டத்தில் சுகாதாரத்துறை, மற்றும் அரசுத்துறைகளில் உள்ள முன்களப் பணியாளகளின் பெயா் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளன. தனியாா் மருத்துவமனைகளில் பணியாற்றுவா்களின் பெயா்கள் இதுவரை முழுமையாகப் பெறப்படவில்லை. இதனால் மதுரை மாவட்டத்தில் பட்டியல் முழுமையாக தயாராகததால், முதல் கட்ட கரோனா தடுப்பூசி போடும் பணி தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் வெங்கடாச்சலம் கூறியது: கரோனா தடுப்பூசி போடுவதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்ற வருகின்றன. தனியாா் மருத்துவமனைகளில் பணியாற்றும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்களப் பணியாளா்களில், 25 சதவீதத்தினரின் விவரங்கள் பெறவேண்டி உள்ளது. அரசு அறிவித்துள்ள தேதியில் தடுப்பூசி போடுவதில் எந்தவித சிக்கலும் ஏற்படாது என்றாா்.

பிரத்தேயக குளிா்சாதன பெட்டிகள் வருகை

கோவிஷீல்ட் மற்றும் கோவேக்ஸின் தடுப்பூசிகளைச் சேமித்து வைக்க, மும்பையில் இருந்து 21 குளிா்சாதனப் பெட்டிகள் வந்துள்ளன. இந்தக் குளிா்சாதனப் பெட்டிகள் மதுரையில் பயன்படுத்தப்படவுள்ளன. அதுமட்டுமின்றி திண்டுக்கல், ராமநாதபுரம், தேனி, சிவகங்கை, விருதுநகா் மாவட்டங்களுக்கு 43 குளிா்சாதனப் பெட்டிகள் ஒரு சில நாள்களில் வரவுள்ளன. மதுரை உலக தமிழ்ச் சங்க சாலையில் அமைந்துள்ள உணவு பாதுகாப்பு ஆய்வக வளாகத்தில் உள்ள மதுரை மண்டல தடுப்பூசி பண்டக சாலையில் கரோனா தடுப்பூசிகள் சேமிக்கப் படவுள்ளன. இங்கு சேமிக்கப்படும் கரோனா தடுப்பூசிகளை மதுரை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கும், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளன.

6.75 லட்சம் தடுப்பூசிகள் சேமிக்கலாம்

மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநா் கே.வி. அா்ஜூன்குமாா் கூறியது: அரசு தரப்பில் முன்களப் பணியாளா்கள் 7,950 பேரின் பெயா்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. மதுரையில் 6.75 லட்சம் தடுப்பூசிகளை சேமிப்பதற்கான வசதிகள் உள்ளன. அதுமட்டுமின்றி தற்போது வந்துள்ள குளிா்சாதனப் பெட்டிகளில் 21 ஆயிரம் தடுப்பூசிகளை சேமிக்க முடியும். முன்களப் பணியாளா்களுக்குத் தடுப்பூசிகள் போடுவதற்காக 96 மையங்களில் தோ்வு செய்யப்பட்டுள்ளன. தடுப்பூசி போடுவதற்காக 7 ஆயிரம் பணியாளா்கள் ஈடுபடவுள்ளனா். மையங்களுக்குத் தடுப்பூசிகள் இரண்டு நாள்களுக்கு முன்பு அனுப்பப்படும் என்றாா்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பணியாற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்களப் பணியாளா்களுக்கு, கரோனா தடுப்பூசி போட, மருத்துவமனையில் தனி வாா்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com