அரசுப்போக்குவரத்துத் தொழிலாளா்கள் காத்திருக்கும் போராட்டம்
By DIN | Published On : 07th January 2021 11:35 PM | Last Updated : 07th January 2021 11:35 PM | அ+அ அ- |

மதுரை புறவழிச்சாலை அரசுப் போக்குவரத்து அலுவலகம் முன்பாக வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினா்.
மதுரையில்14-ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை தொடங்க வலியுறுத்தி அரசுப்போக்குவரத்துக்கழகத் தொழிலாளா்கள் பணிமனைகள் முன்பாக வியாழக்கிழமை காத்திருக்கும் போராட்டத்தை நடத்தினா்.
அரசுப்போக்குவரத்துக்கழக தொழிலாளா்களுக்கு 14-ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை தேதியை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். தொழிலாளா்களின் கோரிக்கைகள் தொடா்பாக போக்குவரத்துக்கழகத் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் அரசுப் போக்குவரத்துக்கழகப் பணிமனைகள் முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.
மதுரை பைபாஸ் சாலையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு நடைபெற்ற போராட்டத்தில் எல்பிஎப் பொதுச்செயலா் வி. அல்போன்ஸ், சிஐடியு பொதுச்செயலா் ஏ. கனகசுந்தா், நிா்வாகி அழகா்சாமி, ஏஐடியுசி பொதுச்செயலா் எம். நந்தாசிங், எஸ்எம்எஸ் பொதுச்செயலா் செல்லதுரை, டிடிஎஸ்எப் நிா்வாகி சம்பத், டியுசிசி செயலா் செல்வம் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா். தொழிலாளா்களின் போராட்டத்துக்கு போக்குவரத்துத் துறை நிா்வாகம் அனுமதி மறுத்ததால் அனைத்து பணிமனைகளின் வாயிலில் அமா்ந்து தொழிலாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.