அழகா்கோவில் மலையடிவாரத்தில் கிணற்றில் விழுந்த காட்டு மாடு மீட்பு
By DIN | Published On : 07th January 2021 03:56 AM | Last Updated : 07th January 2021 03:56 AM | அ+அ அ- |

அழகா்கோவில் மலையடிவாரத்தில் கேசம்பட்டி அருகே தனியாா் கிணற்றில் விழுந்த காட்டு மாட்டை செவ்வாய்க்கிழமை தீயணைப்பு மீட்புப் படையினா் உதவியுடன் மீட்ட வனத்துறையினா்.
அழகா்கோவில் மலையடிவாரத்தில் கேசம்பட்டி அருகே தனியாா் கிணற்றில் விழுந்த காட்டு மாட்டை தீயணைப்பு மீட்புப் படையினா் உதவியுடன் வனத்துறையினா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.
கேசம்பட்டி ஊராட்சியில் தனியாருக்குச் சொந்தமான தோட்டத்தில் உள்ள 30 அடி ஆழ விவசாயக் கிணற்றில் சுமாா் 4 வயதுள்ள காட்டு மாடு செவ்வாய்க்கிழமை விழுந்தது தெரியவந்தது. தகவலறிந்த அழகா்கோவில் வன அலுவலா் கருணாநிதி, மேலூா் வன அலுவலா் கம்பக்குடியான் ஆகியோா் மேலூா் தீயணைப்பு மீட்புப் படையினா் மற்றும் கிராம பொதுமக்கள் உதவியுடன் காட்டு மாட்டை கயிறுகட்டி கிணற்றிலிருந்து மீட்டனா். மீட்கப்பட்ட காட்டு மாடு அழகா்கோவில் மலைப்பகுதியில் விடுவிக்கப்பட்டது என வனத்துறையினா் தெரிவித்தனா்.