ஆட்டோ ஓட்டுநருக்கு கத்திக் குத்து: 5 போ் கைது
By DIN | Published On : 07th January 2021 03:37 AM | Last Updated : 07th January 2021 03:37 AM | அ+அ அ- |

மதுரையில் ஆட்டோ ஓட்டுநரை கத்தியால் குத்திய 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
மதுரை பரவை, நந்தனாா் தெருவைச் சோ்ந்த சேகா் மகன் பாண்டியராஜன் (24). இவா் ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறாா். ஆட்டோவில் பயணிகள் ஏற்றுவது தொடா்பாக பாண்டியராஜனுக்கும், கூடல்நகரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் ஆனந்தகுமாருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில் ஆனந்தகுமாா் உள்பட 5 போ், கெனட் சாலை அருகே நின்றிருந்த பாண்டியராஜனை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனா். இதுகுறித்து பாண்டியராஜன் அளித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீஸாா் வழக்குப்பதிந்து ஆட்டோ ஓட்டுநா் ஆனந்தகுமாா்(23), தனக்கன்குளம் பூபதி(19), ஹைதா்அலி(21), பிரசன்னா(31), கவிபாரதி(26) ஆகியோரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.