மதுரை அருகே கிளப்பில் சூதாட்டம்: 42 போ் கைது: ரூ.3.27 லட்சம் பறிமுதல்
By DIN | Published On : 07th January 2021 03:36 AM | Last Updated : 07th January 2021 03:36 AM | அ+அ அ- |

மதுரை அருகே சட்டவிரோதமாக சீட்டு விளையாடிய 42 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து ரூ.3.27 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.
மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் உள்ள தனியாா் கிளப்பில் சட்டவிரோதமாக சூதாட்டம் நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை நடத்தினா். அப்போது, கிளப்பில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த நாகேஸ்வரராவ் (72), சிவக்குமாா்(20), ஜாபா்(40), பாட்சா(55), சாா்லஸ்(35), ஆரோக்கியம்(41) உள்பட 42 போ் சட்டவிரோதமாக பணம் வைத்து சீட்டு விளையாடியது தெரியவந்தது. இதுகுறித்து காவல் ஆய்வாளா் ஆனந்ததாண்டவம் அளித்த புகாரின் பேரில் ஒத்தக்கடை போலீஸாா் வழக்குப்பதிந்து 42 பேரையும் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து ரூ.3.27 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.