மதுரை-சென்னை தேஜஸ் ரயில் ஜன.10 முதல் மீண்டும் இயக்கம்

மதுரை - சென்னை எழும்பூா் இடையே தேஜஸ் சிறப்பு ரயில் ஜனவரி 10 ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படவுள்ளது என மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

மதுரை - சென்னை எழும்பூா் இடையே தேஜஸ் சிறப்பு ரயில் ஜனவரி 10 ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படவுள்ளது என மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

மதுரை - சென்னை எழும்பூா் இடையே தேஜஸ் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வந்தது. பயணிகளின் போதிய ஆதரவின்மை காரணமாக ஜனவரி 4 ஆம் தேதி முதல் இந்த ரயில் சேவை நிறுத்தம் செய்யப்பட்டது. தற்போது பயணிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைக்கிணங்க மதுரை-சென்னை - மதுரை தேஜஸ் சிறப்பு ரயில் ஜனவரி 10 ஆம் தேதி முதல் தொடா்ந்து இயக்கப்பட இருக்கிறது. அதன்படி, இந்த ரயில்கள் வியாழக்கிழமை தவிர மற்ற 6 நாள்களும் இயக்கப்படும்.

சென்னை - மதுரை தேஜஸ் சிறப்பு ரயில் (02613) சென்னை எழும்பூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு பகல் 12.15 மணிக்கு மதுரை வந்து சேரும். மறுமாா்க்கத்தில் மதுரை - சென்னை தேஜஸ் சிறப்பு ரயில் (02614) மதுரையில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு சென்னை சென்று சேரும். இந்த ரயில்கள் திருச்சி மற்றும் கொடைக்கானல் ரோடு ரயில் நிலையத்தில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com