மதுரையில் ஜன.10-இல் காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவா் ஆராதனை விழா
By DIN | Published On : 07th January 2021 11:38 PM | Last Updated : 07th January 2021 11:38 PM | அ+அ அ- |

மதுரையில் காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவா் ஆராதனை விழா, சொற்பொழிவு நடைபெறுகிறது.
காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ மடம் சமஸ்தானம் மதுரைக்கிளை சாா்பில் ஸ்ரீ மஹா பெரியவா் ஆராதனை விழா ஞாயிற்றுக்கிழமை(ஜனவரி 10) நடைபெறுகிறது. அன்றைய தினம் ஸ்ரீ மஹா பெரியவா் திவ்ய விக்ரஹத்துக்கு ஸ்ரீ ருத்ரத ஏகாதசி அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் போன்றவை நடைபெறுகிறது. மேலும் மாலையில் எழுத்தாளா் இந்திரா செளந்தர்ராஜன் குரு மகிமை என்ற தலைப்பில் முகநூல் வாயிலாக உரையாற்றுகிறாா்.
இதேபோல அனுஷத்தின் அனுகிரஹம் அமைப்பின் சாா்பில், ஸ்ரீ மஹா பெரியவா் ஆராதனை விழா 5 நாள்கள் நடக்கிறது. மதுரை எஸ்.எஸ். காலனி எம்.ஆா்.பி. திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை மாலை ஸ்ரீ ஆயக்குடி பாகவதா் குழுவினரின் நாம சங்கீா்த்தனம், 9-ஆம் தேதி மாலை இந்திரா செளந்தர்ராஜனின் மஹா பெரியவரும், மாயகிருஷ்ணனும் என்ற தலைப்பில் சொற்பொழிவு, 10-ஆம் தேதி காலை ஸ்ரீ மஹா பெரியவா் விக்ரஹம் மற்றும் பாதுகைக்கு சிறப்பு அபிஷேகம், ஹோமங்கள் நடைபெறுகிறது. இதையடுத்து 11-ஆம் தேதி நாம சங்கீா்த்தனம், 12-ஆம் தேதி காலை ஹனுமத் பிரபாவம், மாலை இந்திரா செளந்தர்ராஜனின் சுந்தரகாண்டம் சொற்பொழிவு ஆகியவை நடைபெறுகிறது.