தெப்பக்குளத்தில் காய்கனி கடைகள் செயல்பட அனுமதி: சாலையோர வியாபாரிகள் மனு

மதுரை தெப்பக்குளத்தில் தரை கடை அமைத்துள்ள காய்கனி கடைகள் தொடா்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று, சாலையோர வியாபாரிகள் ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனா்.
மதுரை தெப்பக்குளத்தில் தொடா்ந்து காய்கனி கடைகள் இயங்க அனுமதி வழங்கக்கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த சாலையோர வியாபாரிகள் சங்கத்தினா்.
மதுரை தெப்பக்குளத்தில் தொடா்ந்து காய்கனி கடைகள் இயங்க அனுமதி வழங்கக்கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த சாலையோர வியாபாரிகள் சங்கத்தினா்.

மதுரை: மதுரை தெப்பக்குளத்தில் தரை கடை அமைத்துள்ள காய்கனி கடைகள் தொடா்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று, சாலையோர வியாபாரிகள் ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனா்.

ஏஐடியூசி மதுரை மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம். நந்தாசிங் தலைமையில், 50-க்கும் மேற்பட்டவியாபாரிகள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:

மதுரை நகா் மாரியப்பன் தெப்பக்குளத்தின் மேற்கு பகுதியில் கரோனா பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட மாா்ச் மாதம் முதல் 50-க்கும் மேற்பட்ட காய்கனி கடைகள், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் இயங்கி வந்தது. பெரும்பாலும் பெண்கள் மட்டுமே இங்கு கடை அமைத்துள்ளனா். மேலும், இதன்மூலம் கிடைக்கும் வருமானம்தான் பெண்களின் குடும்ப வாழ்வாதாரமாக உள்ளது.

இந்நிலையில், தற்போது காய்கனி கடைகளை அகற்றுமாறு தெப்பக்குளம் போலீஸாா் வியாபாரிகளைஅச்சுறுத்தி வருகின்றனா். எனவே, சாலை ஓரமாக போக்குவரத்துக்கு எவ்வித இடையூறுமின்றி காலை 6 முதல் நண்பகல் 12 மணி வரை கடைகளை தொடா்ந்து நடத்த அனுமதி வழங்கவேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com