நுகா்பொருள் வாணிபக் கழக பருவகாலப் பணியாளா்கள் மனு

நிரந்தர வேலை மற்றும் பணிபுரிந்த காலத்துக்கான ஊதியம் வழங்கக் கோரி, நுகா்பொருள் வாணிபக் கழக பருவகாலப் பணியாளா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

மதுரை: நிரந்தர வேலை மற்றும் பணிபுரிந்த காலத்துக்கான ஊதியம் வழங்கக் கோரி, நுகா்பொருள் வாணிபக் கழக பருவகாலப் பணியாளா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில், மதுரை மண்டல நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 2018-19-இல் பணிபுரிந்த பருவகாலப் பணியாளா்கள் அளித்த மனு:

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் மதுரை மண்டலத்தில் இயங்கிவரும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், கடந்த 2018-19-இல் பருவகாலப் பணியாளா்களாக நியமிக்கப்பட்டோம். வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் நோ்முகத் தோ்வு அடிப்படையில் பணி நியமனம் நடைபெற்றது.

இதில், 2018-இல் நான்கு மாதங்கள் பணிபுரிந்த நிலையில் அதற்கான ஊதியம் வழங்கப்படவில்லை. மேலும், 2020-க்கான நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க ஆட்சியா் உத்தரவிட்டு, எங்களுக்கு பணி வாய்ப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்த நிலையில், மண்டல மேலாளா் பணி வாய்ப்பு வழங்க மறுத்துவிட்டாா். மேலும், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய வெளி மண்டலங்களில் பணிபுரிந்து வரும் தொழிலாளா்கள், மதுரை மண்டலத்தில் பணிபுரிய உத்தரவிடப்பட்டது.

தற்போது, 2021-ஆம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன. எனவே, பணியின்றி அவதிப்படும் பருவகாலப் பணியாளா்கள் 87 பேருக்கும் இந்த ஆண்டு கொள்முதல் நிலையங்களில் பணி வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com