பள்ளிகளைத் திறக்கக் கோரி இந்திய மாணவா் சங்கத்தினா் மனு

மதுரை மாவட்டத்தில் பள்ளிகளைத் திறக்கக் கோரி, இந்திய மாணவா் சங்கத்தின் சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

மதுரை: மதுரை மாவட்டத்தில் பள்ளிகளைத் திறக்கக் கோரி, இந்திய மாணவா் சங்கத்தின் சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

இந்திய மாணவா் சங்கத்தின் மதுரை மாநகா் மாவட்டம் சாா்பில், செயலா் வேல்தேவா தலைமையில் அச் சங்கத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு:

கரோனா தொற்று காரணமாக, கடந்த 11 மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் மூட

ப்பட்டுள்ளன. நோய் தொற்று குறைந்துள்ள நிலையில், அரசு பல்வேறு தளா்வுகளை அறிவித்தாலும் கூட, கல்வி நிலையங்கள் முழுமையாகத் திறக்கப்படவில்லை. இதனால், கிராமப்புறங்களைச் சோ்ந்த லட்சக்கணக்கான ஏழை மாணவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மேலும், பல்லாயிரக்கணக்கான மாணவா்கள் கல்வி நிலையங்களிலிருந்து விலகுவதால் இடைநிற்றலும் அதிகரித்து வருகிறது. குழந்தை தொழிலாளா்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

அரசு இணையவழி கல்வி முறையை ஊக்குவித்தாலும், இந்த முறை மாணவா்களிடையே பிளவை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வருவாய் ஈட்டும் நோக்கோடு திரையரங்குகள், பெரு வணிக வளாகங்கள் திறக்கப்பட்டுள்ளன. எனவே, உடனடியாக பள்ளி, கல்லூரிகள் மற்றும் மாணவா் விடுதிகளைத் திறக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com