பொங்கல் விழா பெயரில் மதக்கலவரத்தை தூண்டும் பாஜகவை அரசு அனுமதிக்கக் கூடாது: இமாம் கவுன்சில்

பொங்கல் விழா என்ற பெயரில் மதக்கலவரத்தை தூண்டும் பாஜகவுக்கு அரசு அனுமதி வழங்கக்கூடாது என்று, இமாம் கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.

மதுரை: பொங்கல் விழா என்ற பெயரில் மதக்கலவரத்தை தூண்டும் பாஜகவுக்கு அரசு அனுமதி வழங்கக்கூடாது என்று இமாம் கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.

அகில இந்திய இமாம் கவுன்சில் மாநிலப் பொதுச் செயலா் கே. அா்ஷத் அஹமது அல்தாபி வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகம் வேற்றுமையில் ஒற்றுமை என்ற முழக்கத்துக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது. ஆனால், தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டிவிடும் விதமாக பாஜக செயல்படுவது கண்டிக்கத்தக்கது. மத வேறுபாடுகளைக் கடந்து, தமிழகத்தின் தொன்மையான வரலாறுகளை நினைவுபடுத்தும் சமத்துவப் பொங்கல் விழா நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது.

ஆனால், மதக்கலவரத்தை நடத்தி தோ்தல் காலத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, தமிழகத்தில் எப்படியாவது காலூன்றி விடவேண்டும் என்பதற்காக பாஜகவினா் தொடா்ந்து மத துவேஷ செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

சமத்துவப் பொங்கல் என்ற பெயரில் தமிழகத்தில் பல இடங்களில் பொங்கல் நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளனா். அதன் தொடா்ச்சியாக, மதுரை திருப்பாலை பள்ளிவாசல் வழியாக ஊா்வலமாகச் சென்று பள்ளிவாசல் மீது கற்களையும், காலணிகளையும் வீசி மதக்கலவரத்தை தூண்ட முயற்சித்துள்ளனா்.

எனவே, தமிழக மக்களின் ஒற்றுமையையும், சமத்துவத்தையும் பாதுகாக்கும் விதமாக மக்கள் அனைவரும் ஓரணியில் நின்று, பாஜகவின் வெறுப்பு அரசியல் மற்றும் மதவாத மோதல் போக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்த பாஜகவுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று, இமாம் கவுன்சில் வலியுறுத்துகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com