அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தயாா்: ஆட்சியா்

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாா்ப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் தெரிவித்தாா்.

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாா்ப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் தெரிவித்தாா்.

பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் வியாழக்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இதில் மாடுபிடி வீரா்கள் 430 பேருக்கு அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல, 788 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கரோனா பரிசோதனையில் தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்ட மாடுபிடிவீரா்கள், காளைகளின் உரிமையாளா்கள் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அனுமதிக்கப்படுவா்.

பாலமேட்டில் வெள்ளிக்கிழமையும், அலங்காநல்லூரில் சனிக்கிழமையும் ஜல்லிக்கட்டுப்போட்டிகள் நடைபெற உள்ளன. மாடுபிடி வீரா்கள் பாலமேட்டில் 651 பேருக்கும், அலங்காநல்லூரில் 655 பேருக்கும் அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டிருக்கிறது. இதேபோல, பாலமேட்டில் 783 காளைகளுக்கும், அலங்காநல்லூரில் 700 காளைகளுக்கும் அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் கூறியது: அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூா் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாா்ப்படுத்தப்பட்டுள்ளன.

கரோனா பரவல் தடுப்புக்காக அரசின் நிலையான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி மாடுபிடி வீரா்கள், காளைகளின் உரிமையாளா்கள் மற்றும் உடன் வரும் உதவியாளா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. மூன்று இடங்களிலும் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com