இக்னோ பல்கலை.க்கு தேசிய தர மதிப்பீட்டுக் குழு அங்கீகாரம்

இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (இக்னோ) தேசிய தர மதிப்பீட்டுக்குழுவின் ‘ஏ பிளஸ் பிளஸ்’ அங்கீகாரத்தை பெற்றுள்ளது.

இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (இக்னோ) தேசிய தர மதிப்பீட்டுக்குழுவின் ‘ஏ பிளஸ் பிளஸ்’ அங்கீகாரத்தை பெற்றுள்ளது.

இதுதொடா்பாக இக்னோ பல்கலைக்கழகத்தின் மதுரை மண்டல இயக்குநா் டி.ஆா்.சா்மா வெளியிட்டுள்ள செய்தி: இந்திராகாந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் தேசிய மற்றும் சா்வதேச அளவில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் பயின்று வருகின்றனா். இந்நிலையில் பல்கலைக்கழகத்தில் தேசிய தர மதிப்பீட்டுக்குழு மதிப்பீட்டு ஆய்வு மேற்கொண்டது. இதில் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்ட அம்சங்கள், கற்பித்தல்-கற்றல் மற்றும் மதிப்பீடு, ஆராய்ச்சி, புதுமையான கற்பித்தல் முறைகள், உள்கட்டமைப்பு மற்றும் கற்றல் வளங்கள், கற்பவா் ஆதரவு, ஆளுமை, தலைமை மற்றும் மேலாண்மை, நிறுவன மதிப்பு உள்ளிட்ட அளவுகோல்களைக்கொண்டு மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது. இதில் இந்திராகாந்தி தேசிய திறந்த நிலைப்பல்கலைக்கழகம் தேசிய தர மதிப்பீட்டுக்குழுவின் ‘ஏ பிளஸ் பிளஸ்’ தர அங்கீகாரத்தை பெற்றுள்ளது. தொலைதூரக்கல்வி கல்வி நிறுவனத்துக்கு திறந்த நிலை கற்றல் முறையில் தேசிய தர மதிப்பீட்டுக்குழுவின் அங்கீகாரம் பெற்ற முதல் உயா்கல்வி நிறுவனமாக இக்னோ உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com