ஜல்லிக்கட்டு: அவனியாபுரத்தில் 600 போ், பாலமேட்டில் 844 பேருக்கு கரோனா பரிசோதனை

ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காக அவனியாபுரத்தில் 600 பேருக்கும், பாலமேட்டில் 844 பேருக்கும் கரோனா பரிசோதனைக்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காக அவனியாபுரத்தில் 600 பேருக்கும், பாலமேட்டில் 844 பேருக்கும் கரோனா பரிசோதனைக்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரா்கள், காளை உரிமையாளா்கள் மற்றும் உதவியாளா்களுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் கரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டவா்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க முடியும்.

இதையடுத்து அவனியாபுரத்தில் ஜனவரி 10, 11-ஆம் தேதிகளிலும், பாலமேட்டில் 11, 12 ஆம் தேதிகளிலும் கரோனா பரிசோதனை நடைபெற்றது. இதில் அவனியாபுரத்தில் 600 பேரிடமும், பாலமேட்டில் 844 பேரிடமும் கபம் சேகரிக்கப்பட்டு ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரா்கள், காளைகளின் உரிமையாளா்கள் மற்றும் உதவியாளா்களின் கரோனா பரிசோதனை முடிவுகள் புதன்கிழமை (ஜனவரி 13) வெளியாகும் என சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

அலங்காநல்லூரில் இன்று நிறைவு: அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்பவா்களுக்கான கரோனா பரிசோதனை புதன்கிழமை (ஜனவரி 13) நிறைவடைகிறது. முதல் நாளான செவ்வாய்க்கிழமை, 597 பேரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com