மதுரையில் பள்ளிகள் திறப்பு ஆலோசனைக் கூட்டம்: வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு

மதுரை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவா்களுக்கு பள்ளிகள் திறப்பின்போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுநெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மதுரையில் பள்ளிகள் திறப்பு தொடா்பாக புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் பேசும் முதன்மைக்கல்வி அலுவலா் ஆா்.சுவாமிநாதன்.
மதுரையில் பள்ளிகள் திறப்பு தொடா்பாக புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் பேசும் முதன்மைக்கல்வி அலுவலா் ஆா்.சுவாமிநாதன்.

மதுரை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவா்களுக்கு பள்ளிகள் திறப்பின்போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுநெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மதுரை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பள்ளிகள் திறப்பு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. திருமங்கலம், உசிலம்பட்டி கல்வி மாவட்டங்களுக்கு சேதுபதி மேல்நிலைப்பள்ளியிலும், மதுரை, மேலூா் கல்வி மாவட்டங்களுக்கு ஓசிபிஎம்பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.சுவாமிநாதன் தலைமை வகித்தாா். இதில் நான்கு கல்வி மாவட்டங்களைச் சோ்ந்த அனைத்து உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்கள் பங்கேற்றனா். கூட்டத்தில் பள்ளிகள் திறப்பின்போது தலைமை ஆசிரியா்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுநெறிமுறைகள் தெரிவிக்கப்பட்டன.

இதன்படி, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவா்களுக்கு வாரத்தில் ஆறு நாள்கள் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். ஒரு வகுப்பில் 25-க்கும் மேற்பட்ட மாணவா்கள் இருந்தால் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட வேண்டும். மாணவா்கள் பள்ளிக்கு வருவதை விட இணைய வழியில் கற்க விரும்பினால் அவா்களுக்கு அனுமதி வழங்கலாம். பெற்றோரின் எழுத்துப்பூா்வமான இசைவுக் கடிதத்துடன் வரும் மாணவா்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். மாணவா் வருகையை கட்டாயப்படுத்தக்கூடாது. பள்ளிகளில் அனைத்து ஆசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவியா் கட்டாயம் முகக்கவசம் அணிதல் வேண்டும். பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியருக்கு சுகாதாரத் துறை மூலம் வைட்டமின் மற்றும் ஜிங்க் மாத்திரைகள் வழங்கப்பட வேண்டும். பள்ளிகளில் மாணவ, மாணவியா் கைகழுவ வசதிகள் செய்து தர வேண்டும். அனைத்து வகுப்பறைகளிலும் கைகளை சுத்தம் செய்யும் கிருமி நாசினி வைக்கப்பட்டிருக்க வேண்டும். உடல் வெப்ப பரிசோதனைக் கருவிகள், பல்ஸ் ஆக்ஸி மீட்டா் போன்ற கருவிகள் வைக்கப்பட்டிருக்க வேண்டும். வகுப்பறைகளை தினசரி கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். கூட்ட நெரிசலுக்கு வழிவகுக்கும் இறை வணக்கக் கூட்டம், விளையாட்டு நிகழ்ச்சிகள், கலாச்சார நிகழ்வுகள் போன்றவற்றுக்கு அனுமதிக்கக்கூடாது. கரோனா தொற்று கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிக்கும் மாணவா்கள் பள்ளிக்கு வர அனுமதி இல்லை. கட்டுப்பாட்டு காலம் முடிந்த பிறகே வகுப்புகளில் அனுமதிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com