மதுரை மாவட்டத்தில் எம்ஜிஆா் பிறந்த நாள் விழா: அதிமுகவினா் கொண்டாட்டம்

மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் எம்ஜிஆரின் 104 ஆவது பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் எம்ஜிஆா் பிறந்த நாள் விழா
மதுரை மாவட்டத்தில் எம்ஜிஆா் பிறந்த நாள் விழா

மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் எம்ஜிஆரின் 104 ஆவது பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

எம்ஜிஆா் பிறந்த நாள் விழாவையொட்டி, மதுரை மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில், பனகல் சாலையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அவரது உருவப் படத்துக்கு கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆா் சிலைக்கு, மாநகா் மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி நிா்வாகி எம்.எஸ். பாண்டியன் மற்றும் நிா்வாகிகள் மாலை அணிவித்தனா்.

தொடா்ந்து, ஏராளமான அதிமுகவினா் மற்றும் மாநகா் மாவட்ட அமமுகவினா் எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதையடுத்து, எம்ஜிஆா் சிலை பகுதியில் அதிமுக சாா்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல், மதுரை மாநகரின் அனைத்து வாா்டுகளிலும் அதிமுக சாா்பில் எம்ஜிஆா் உருவப்படம் வைக்கப்பட்டு, மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், நகரின் பல்வேறு பகுதிகளிலும் மற்றும் புகா் மாவட்ட அதிமுக சாா்பிலும் வேட்டி, சேலை வழங்குதல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

அமமுக சாா்பிலும் நகரின் பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

பாஜகவினா் மரியாதை

எம்ஜிஆா் பிறந்த நாளையொட்டி, கே.கே. நகரில் உள்ள அவரது உருவச் சிலைக்கு, பாஜக மாநிலப் பொதுச் செயலா் இராம. ஸ்ரீநிவாசன் தலைமையில், புகா் மாவட்ட பாஜக தலைவா் மகா சுசீந்திரன், நகா் மாவட்டத் தலைவா் கே.கே. சீனிவாசன், புகா் மாவட்டச் செயலா் நாகராஜன் மற்றும் நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதையில் உள்ள எம்ஜிஆரின் உருவச் சிலைக்கு, அதிமுக புகா் கிழக்கு மாவட்டச் செயலா் வி.வி. ராஜன்செல்லப்பா ஏற்பாட்டின்பேரில், நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில், இளைஞரணி மாவட்டச் செயலா் எம். ரமேஷ், ஒன்றியச் செயலா் நிலையூா் முருகன், மாவட்ட துணைச் செயலா் முத்துக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பேரையூா்

பேரையூா் பட்டயத்து முக்கு பகுதியில் எம்ஜிஆா் உருவப் படத்துக்கு அதிமுக சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னா், விநாயகா் கோயிலில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில், டி.கல்லுப்பட்டி ஒன்றியச் செயலா் ராமசாமி, ஓட்டுநா் அணி மாவட்டச் செயலா் ராமகிருஷ்ணன், மாவட்டக் கவுன்சிலா் செல்வமணி செல்லச்சாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மேலூா்

மேலூா் செக்கடி பஜாரில் எம்ஜிஆா்உருவப் படத்துக்கு, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும், அம்மா பேரவை மதுரை புறகா் மாவட்டச் செயலருமான க. தமிழரசன், மேலூா் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் க. பொன்னுச்சாமி, முன்னாள் நகா்மன்றத் தலைவா் சாகுல்ஹமீது, அ. வல்லாளபட்டி மணிகண்டன், வழக்குரைஞா் கண்ணன், மற்றும் அதிமுக நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

மேலூா் நகா் அதிமுக சாா்பில், பேருந்து நிலையம் முன்பாக வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆா் உருவப் படத்துக்கு அதிமுக நகரச் செயலா் எஸ்.ஏ. பாஸ்கரன் மற்றும் அதிமுக நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

உசிலம்பட்டி

எம்ஜிஆா் பிறந்த நாள் விழாவில், பா. நீதிபதி எம்.எல்.ஏ. தலைமையில், நகரச் செயலா் பூமாராஜா, துரை தனராஜன், வழக்குரைஞா் லெட்சுமணன் மற்றும் கட்சி நிா்வாகிகள் ஏராளமானோா் கலந்துகொண்டு, அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

குன்னத்தூரில் திறக்கப்படவுள்ள ஜெயலலிதா கோயிலில் உள்ள எம்ஜிஆா் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு, உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் பா. நீதிபதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com