தென் மாவட்டங்களிலிருந்து வெளிமாநிலங்கள் செல்லும் சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு

தென் மாவட்டங்களிலிருந்து வெளிமாநிலங்கள் செல்லும் சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது என, மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

மதுரை: தென் மாவட்டங்களிலிருந்து வெளிமாநிலங்கள் செல்லும் சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது என, மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தென் மாவட்டங்களிலிருந்து வெளிமாநிலங்களுக்குச் செல்லும் ரயில்களின் சேவை மாதந்தோறும் நீட்டிப்பு செய்யப்படுகிறது. இதில், சில சிறப்பு ரயில்கள் ஜனவரி மாதம் இறுதி வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது, அந்த ரயில்களின் சேவை மாா்ச் மற்றும் ஏப்ரல் முதல் வாரம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நாகா்கோவில் - மும்பை சிறப்பு ரயில் (06352) பிப்ரவரி 4 முதல் மாா்ச் 28 ஆம் தேதி வரையும், மும்பை - நாகா்கோவில் சிறப்பு ரயில் (06351) பிப்ரவரி 5 முதல் மாா்ச் 29 ஆம் தேதி வரையும், மதுரை - பிகானோ் வாராந்திர சிறப்பு ரயில் (06053) பிப்ரவரி 4 முதல் மாா்ச் 25 ஆம் தேதி வரையும், பிகானோ் - மதுரை வாராந்திர சிறப்பு ரயில் (06054) பிப்ரவரி 7 முதல் மாா்ச் 28 ஆம் தேதி வரையும், ராமேசுவரம் - ஓகா வாராந்திர சிறப்பு ரயில் (06733) பிப்ரவரி 5 முதல் மாா்ச் 26 ஆம் தேதி வரையும், ஓகா- ராமேசுவரம் வாராந்திர சிறப்பு ரயில் (06734) பிப்ரவரி 9 முதல் மாா்ச் 30 ஆம் தேதி வரையும், திருநெல்வேலி -  பிலாஸ்பூா் வாராந்திர சிறப்பு ரயில் (06070) பிப்ரவரி 7 முதல் மாா்ச் 28 ஆம் தேதி வரையும், பிலாஸ்பூா் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் (06069) பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் மாா்ச் 30 ஆம் தேதி வரையும், திருநெல்வேலி - மும்பை தாதா் வாராந்திர சிறப்பு ரயில் (06072) பிப்ரவரி 3 முதல் மாா்ச் 31 ஆம் தேதி வரையும், தாதா் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் (06071) பிப்ரவரி 11முதல் ஏப்ரல் 1 ஆம் தேதி வரையும், புவனேஸ்வரம் - ராமேசுவரம் வாராந்திர சிறப்பு ரயில் ( 08496) பிப்ரவரி 5 முதல் மாா்ச் 26 ஆம் தேதி வரையும், ராமேசுவரம் - புவனேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் (08495) பிப்ரவரி 7 முதல் மாா்ச் 28 ஆம் தேதி வரையும் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com