செந்தமிழ்க் கல்லூரியில் பேராசிரியா் தொ.பரமசிவன் நினைவஞ்சலி நிகழ்ச்சி

மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் சாா்பில் பேராசிரியா் தொ.பரமசிவன் நினைவஞ்சலி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
செந்தமிழ்க்கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்ச்சியில் பேராசிரியா் தொ.பரமசிவனின் உருவப்படத்தை திறந்துவைத்த பேராசிரியா் கு.ஞானசம்பந்தன். உடன், புரட்சிக்கவிஞா் மன்றத் தலைவா் பி.வரதராஜன்

செந்தமிழ்க் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நான்காம் தமிழ்ச்சங்க செயலா் ச.மாரியப்ப முரளி தலைமை வகித்தாா். பேராசிரியா் தொ.பரமசிவன் உருவப்படத்தை பேராசிரியா் கு.ஞானசம்பந்தன் திறந்து வைத்துப்பேசியது: பேராசிரியா் தொ.பரமசிவன் கையில் பணமில்லாமல் கூட வெளியே செல்வாா். ஆனால் புத்தகங்கள் இல்லாமல் வெளியே செல்லமாட்டாா். கல்லூரியின் அனைத்துத்துறைகளிலும் சென்று சொற்பொழிவாற்றியவா் அவா் என்றாா்.

பேராசிரியா் தொ.பரமசிவனின் திராவிட இயக்க சாா்பு குறித்து புரட்சிக்கவிஞா் மன்றத் தலைவா் பி.வரதராஜன் பேசினாா். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் ம.திருமலை மற்றும் சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி முன்னாள் பேராசிரியா் ம.பெ.சீனிவாசன் ஆகியோா் பேராசிரியா் தொ.பரமசிவனுடனான அனுபவங்கள் குறித்து எடுத்துரைத்தனா். முன்னதாக கல்லூரி முதல்வா் கி.வேணுகா வரவேற்றாா். நிகழ்ச்சியின் முடிவில் துணை முதல்வா் கோ.சுப்புலட்சுமி நன்றியுறையாற்றினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com