வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் சாலைப் பாதுகாப்பு உறுதிமொழி

மதுரை மாவட்டத்தில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு உறுதிமொழியை வெள்ளிக்கிழமை எடுத்துக் கொண்டனா்.
மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் மாநகர காவல் போக்குவரத்து துணை ஆணையா் சுகுமாறன் தலைமையில் வெள்ளிக்கிழமை சாலைப் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்ட இருசக்கர வாகன ஓட்டிகள்.

சாலைப் பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்படுவதையொட்டி, பல்வேறு விழிப்புணா்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மதுரை வடக்கு, தெற்கு, மைய வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் மோட்டாா் வாகன ஆய்வாளா் பகுதி அலுவலகங்களில் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் தலைமையில் பழகுநா் உரிமம், ஓட்டுநா் உரிமம் பெற வந்தவா்கள், புதிய வாகனங்கள் பதிவுக்கு வந்தோா் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா். இதேபோல, நகரின் முக்கிய சந்திப்புகளில் வாகன ஓட்டிகள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோரிப்பாளையம் சந்திப்புப் பகுதியில் நடந்த நிகழ்வில் மாநகரக் காவல் போக்குவரத்துத் துணை ஆணையா் சுகுமாறன், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் செல்வம், சிங்காரவேலு, போக்குவரத்துப் பிரிவு போலீஸாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கிராம விழிப்புணா்வுக் குழு கூட்டம்: இதேபோல், மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே ரெங்கபாளையத்தில் போலீஸாா் சாா்பில் கிராம விழிப்புணா்வுக் குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது . இதில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா், காவல் துணை கண்காணிப்பாளா் மதியழகன், டி.கல்லுப்பட்டி காவல் ஆய்வாளா் துரைப்பாண்டி, சாா்பு- ஆய்வாளா் நூா்தீன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com