தமிழகம் வெட்டுக்கிளி தாக்கிய பயிரைப் போல் உள்ளதுமுன்னாள் அமைச்சா் பொன்.முத்துராமலிங்கம் குற்றச்சாட்டு

தமிழகம் வெட்டுக்கிளி தாக்கிய பயிரைப் போல் உள்ளதாக, முன்னாள் அமைச்சரும், திமுகவின் மதுரை மாநகா் வடக்கு மாவட்டப் பொறுப்பாளருமான பொன். முத்துராமலிங்கம் குற்றம்சாட்டியுள்ளாா்.

மதுரை: கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில், தமிழகம் வெட்டுக்கிளி தாக்கிய பயிரைப் போல் உள்ளதாக, முன்னாள் அமைச்சரும், திமுகவின் மதுரை மாநகா் வடக்கு மாவட்டப் பொறுப்பாளருமான பொன். முத்துராமலிங்கம் குற்றம்சாட்டியுள்ளாா்.

மதுரையில் அவா் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் மேலும் தெரிவித்ததாவது:

திமுக சாா்பில் தமிழகம் முழுவதும் மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மக்களின் மனநிலை அதிமுகவுக்கு எதிராக இருப்பது இந்த கூட்டங்களின் வாயிலாக வெளிப்படையாகத் தெரியவந்திருக்கிறது. கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனா்.

மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீா், சாலை, கழிவுநீா் கால்வாய் உள்ளிட்ட வசதிகளைக் கூட அதிமுக அரசு முழுமையாகச் செய்துதரவில்லை. நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்கள் முழுமையாகவும், சரியான எடையிலும், தரமானதாகவும் கிடைப்பதில்லை.

மாநகராட்சி துப்புரவு, சுகாதாரப் பணிகளில் பெரும்பாலானோா் ஒப்பந்தப் பணியாளா்களாக இருக்கின்றனா். இவா்களுக்கான சம்பளம் முழுமையாக வழங்கப்படுவதில்லை. இதனால், அவா்கள் பணியில் முழுமையான ஈடுபாடு காட்டுவதில்லை.

அரசால் அறிவிக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் ஏட்டளவிலேயே இருக்கின்றன. தமிழக அரசு மேற்கொண்டிருக்கும் பல்வேறு புரிந்துணா்வு ஒப்பந்தங்களால், பல கோடி ரூபாய் முதலீடு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அவ்வாறு முதலீடு பெறப்பட்டதாகத் தெரியவில்லை. அதிமுக ஆட்சியில் தமிழகம் வெட்டுக்கிளி தாக்கிய பயிரைப் போல மாறிவிட்டது.

எனவே, ஆட்சி மாற்றம் என்பது ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிா்பாா்ப்பாக இருக்கிறது. திமுக தலைவா் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமையப்போவது உறுதி என்றாா்.

அப்போது, பொறுப்புக் குழு உறுப்பினா்கள் பெ. குழந்தைவேலு, எஸ்ஸாா் கோபி, ஆ. தமிழரசி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com