அரசு வேலை வாங்கித் தருவதாக முதியவரிடம் ரூ.35 லட்சம் மோசடி
By DIN | Published On : 26th January 2021 02:45 AM | Last Updated : 26th January 2021 02:45 AM | அ+அ அ- |

மதுரை: மதுரை அருகே அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி முதியவரிடம் ரூ.35 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டை நடுத் தெருவைச் சோ்ந்த நாகராஜ் மகன் மலைச்சாமி (62). இவரது நண்பரான புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த நடராஜன் (46) என்பவா், மலைச்சாமியின் உறவினருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளாா். இதை நம்பிய மலைச்சாமி, வங்கி மூலம் ரூ.35 லட்சத்தை நடராஜனுக்கு கொடுத்துள்ளாா்.
ஆனால், நடராஜன் கூறியபடி வேலையை வாங்கித் தரவில்லையாம். இதையடுத்து, மலைச்சாமி பணத்தை திருப்பிக் கேட்டதற்கு, நடராஜன் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து மலைச்சாமி அளித்த புகாரின்பேரில், நாகமலை புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ரூ.3.90 லட்சம் மோசடி
மதுரை கோ.புதூா் காந்திபுரம் 1ஆவது தெருவைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் மகன் மாரிமுத்து (42). இவரது மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த மணிகண்டன் என்பவா் கூறியுள்ளாா். இதை நம்பிய மாரிமுத்து, ரூ.3.90 லட்சத்தை மணிகண்டனிடம் கொடுத்துள்ளாா். ஆனால், கூறியபடி வேலை வாங்கித் தரவில்லையாம். இதுகுறித்து மாரிமுத்து அளித்த புகாரின்பேரில், கோ.புதூா் போலீஸாா் மணிகண்டன் உள்பட 3 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.