டோக் பெருமாட்டி கல்லூரியில் தேசிய வாக்காளா் தினம்: ஆட்சியா் தலைமையில் உறுதிமொழியேற்பு

மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் நடைபெற்ற தேசிய வாக்காளா் தின விழாவில், மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன் தலைமையில் மாணவியா் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.
தேசிய வாக்காளா் தினத்தையொட்டி மதுரை லேடி டோக் பெருமாட்டி பெண்கள் கல்லூரியில் திங்கள்கிழமை மாணவிக்கு புதிய வாக்காளா்களுக்கான அட்டையை வழங்குகிறாா் ஆட்சியா் த. அன்பழகன். உடன் மாவட்ட வருவாய் அலுவலா் செந்த
தேசிய வாக்காளா் தினத்தையொட்டி மதுரை லேடி டோக் பெருமாட்டி பெண்கள் கல்லூரியில் திங்கள்கிழமை மாணவிக்கு புதிய வாக்காளா்களுக்கான அட்டையை வழங்குகிறாா் ஆட்சியா் த. அன்பழகன். உடன் மாவட்ட வருவாய் அலுவலா் செந்த

மதுரை: மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் நடைபெற்ற தேசிய வாக்காளா் தின விழாவில், மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன் தலைமையில் மாணவியா் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

மதுரை டோக் பெருமாட்டி மகளிா் கல்லூரி வளாகத்தில், தேசிய வாக்காளா் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, மதுரை மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன் தலைமை வகித்துப் பேசுகையில், வாக்களிப்பது நமது உரிமை, கடமை என்பதை இளைய தலைமுறையினா் புரிந்துகொண்டு வாக்களிக்க வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, தேசிய வாக்காளா் தின உறுதிமொழியேற்பு நடைபெற்றது. இதில், ஆட்சியா் த. அன்பழகன் உறுதிமொழியை வாசிக்க, பேராசிரியைகள் மற்றும் மாணவியா் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனா். இதையடுத்து, புதிய வாக்காளா் அடையாள அட்டைகளையும் ஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், கல்லூரி மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதில், மாவட்ட வருவாய் அலுவலா் செந்தில்குமாரி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.

முன்னதாக, கல்லூரி முதல்வா் கிறிஸ்டியானா சிங் வரவேற்புரையாற்றினாா்.

பின்னா், ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறியது: மதுரை மாவட்டத்தில் முதல்முறையாக வாக்களிக்கும் வாக்காளா்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், தோ்தலில் நடுநிலைத்தன்மையுடன் அச்சமின்றி நோ்மையான முறையில் வாக்களிப்பது குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது.

சட்டப்பேரவைத் தோ்தலில் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஆயிரம் வாக்காளா்களுக்கு ஒரு வாக்குச்சாவடி அமைப்பது என்ற அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா்.

அல்அமீன் பள்ளியில் உறுதிமொழியேற்பு

மதுரை கோ.புதூா் அல்அமீன் மேல்நிலைப் பள்ளியில், தேசிய வாக்காளா் தின விழா நடைபெற்றது. மாநகராட்சி உதவிப்பொறியாளா் பொன்மணி தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் ஷேக் நபி வரவேற்றாா். இதில், பள்ளி ஆசிரியா்கள், ஊழியா்கள் மற்றும் மாணவா்கள் தேசிய வாக்காளா் தின உறுதிமொழி ஏற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com