மதுரை நகரில் ஜன.28,30-இல் இறைச்சி விற்பனைக்குத் தடை
By DIN | Published On : 26th January 2021 02:32 AM | Last Updated : 26th January 2021 02:32 AM | அ+அ அ- |

மதுரை: மதுரை நகரில் ஜனவரி 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஆடு, கோழி உள்ளிட்ட இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்தி: மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை ( ஜன. 28) ராமலிங்க சுவாமிகள் தினம் மற்றும் சனிக்கிழமை (ஜன. 30) காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு இரண்டு நாள்கள் ஆடு, மாடு, கோழி, பன்றி உள்ளிட்ட இதர இறைச்சி விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும், மேற்கண்ட நாள்களில் உயிரினங்களை வதை செய்வதோ, இறைச்சி விற்பனைக் கடைகளை திறந்துவைக்கவோ கூடாது. தடையை மீறி திறந்து வைக்கப்படும் கடைகளில் இறைச்சி பறிமுதல் செய்யப்படுவதோடு, சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.