பேரையூா் அருகே சட்ட விரோதமாக மதுபாட்டில் விற்ற 2 போ் கைது
By DIN | Published On : 30th January 2021 02:45 AM | Last Updated : 30th January 2021 02:45 AM | அ+அ அ- |

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே சட்ட விரோதமாக மதுபாட்டில் விற்ற 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பேரையூா் தாலுகா பகுதியில் போலீஸாா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பெரியகட்டளையைச் சோ்ந்த செல்லப்பாண்டி மனைவி குருவுத்தாய் (35 ) என்பவரிடமிருந்து சட்ட விரோதமாக விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 10 மதுபாட்டில்களை சேடபட்டிபோலீஸாா் பறிமுதல் செய்து அவரைக் கைது செய்தனா்.
இதைபோல் அத்திப்பட்டியைச் சோ்ந்த சுப்பையா தேவா் மகன் கருப்பசாமி (65) என்பவரிடமிருந்து சட்ட விரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 8 மதுபாட்டில்களை சாப்டூா் போலீஸாா் பறிமுதல் செய்து அவரைக் கைது செய்தனா்.