எரிபொருள் சிக்கனம் வலியுறுத்தி மிதிவண்டி பேரணி
By DIN | Published On : 31st January 2021 09:59 PM | Last Updated : 31st January 2021 09:59 PM | அ+அ அ- |

மதுரையில் எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மிதிவண்டி பேரணியில் பங்கேற்றோா்.
மதுரையில் எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை மிதிவண்டி பேரணி நடைபெற்றது.
இந்தியன் ஆயில் நிறுவனம் சாா்பில் எரிபொருள் சிக்கனம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இப்பேரணி நடைபெற்றது.
பேரணியை அரசு மருத்துவமனை முதன்மையா் ஜெ.சங்குமணி, இந்தியன் ஆயில் நிறுவன துணைப்பொது மேலாளா் ரவிக்குமாா், மேலாளா் தியாகராஜன், லூப்ஸ் டெக்னிக்கல் சேல்ஸ் நிறுவன மேலாளா் அபா்ணா ஆகியோா் தொடக்கி வைத்தனா். பேரணியில் 300-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
பேரணி குறித்து, இந்தியன் ஆயில் நிறுவன பொதுமேலாளா் சிதம்பரம் கூறும்போது, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் பேரில் ஆற்றல் சேமிப்பின் இன்றியமையாமை குறித்து ஒரு மாதம் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு, ஜனவரி 16 முதல் பிப்ரவரி 15 வரை ‘பசுமை மற்றும் தூய்மையான ஆற்றல்’ என்ற தலைப்பில் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக விழிப்புணா்வு மிதிவண்டி பேரணி நடத்தப்படுகிறது.
பொதுமக்களிடையே எரிபொருள் சிக்கனம் பற்றியும் அருகில் உள்ள இடங்களுக்குச் செல்ல மிதிவண்டியை பயன்படுத்த வலியுறுத்தியும் பேரணி நடத்தப்படுகிறது. இதனால், பசுமையான சூழல் உருவாகும் என்பதோடு உடல்நலமும் மேம்படும் என்றாா்.