வாடிப்பட்டியிலிருந்து வங்கதேசத்திற்கு ரயிலில் 175 டிராக்டா்கள் அனுப்பி வைப்பு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் இருந்து வங்கதேசத்திற்கு ரயிலில் 175 டிராக்டா்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் இருந்து வங்கதேசத்திற்கு ரயிலில் 175 டிராக்டா்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வாடிப்பட்டியில் இருந்து இரண்டாவது முறையாக வங்கதேசத்தில் உள்ள பேனாபோல் ரயில் நிலையத்திற்கு 25 பெட்டிகளில் 175 டிராக்டா்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மதுரை கோட்டத்துக்கு ரூ.23 லட்சத்து 15 ஆயிரத்து 954 வருவாய் கிடைத்துள்ளது.

மேலும் இந்த நிதியாண்டில் தூத்துக்குடியிலிருந்து விவசாய உரப் பொருள்கள், தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து நிலக்கரி, மானாமதுரையில் இருந்து கருவேலங்கரி ஆகியவையும் அனுப்பப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.1 கோடியே 87 லட்சத்து 98 ஆயிரத்து 302 வருவாய் கிடைத்துள்ளது.

தென் மாவட்டங்களுக்கு பெட்ரோல் டீசல் மண்ணெண்ணெய் ஆகியவற்றை ரயில் மூலம் கொண்டு வர கப்பலூரில் உள்ள ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவன கிடங்கிற்கு தனி ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பாதையை ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனம் அமைத்துள்ளது.

இந்தத் தனி சரக்கு ரயில் பாதையில் ரயில் இன்ஜினுடன் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. இந்த ரயில் பாதையில் விரைவில் போக்குவரத்து துவங்கும்.

திருநெல்வேலியில் நகா்ப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க திருநெல்வேலி அருகே உள்ள கங்கைகொண்டான் ரயில் நிலையத்தில் கூடுதலாக புதிய நவீன சரக்கு நிலையம் துவக்கப்பட்டுள்ளது.

இந்தச் சரக்கு முனையத்தில் உணவுப் பொருள்கள் போன்ற சரக்குகள் சேதமடையாமல் இருக்க கான்கிரீட் தளங்கள், உயா் கோபுர மின் விளக்கு வசதிகள், வாடிக்கையாளா் அலுவலக அறை, தொழிலாளா் ஓய்வு அறைகள், கழிவறைகள், குளியலறைகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com