ஒத்தக்கடையில் கஞ்சா விற்பனையைதடுக்கக் கோரி மநீம ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 06th July 2021 03:32 AM | Last Updated : 06th July 2021 03:32 AM | அ+அ அ- |

மதுரை ஒத்தக்கடையில் கஞ்சா விற்பனையைத் தடுக்கக்கோரி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியினா்.
மதுரை: மதுரை அருகே ஒத்தக்கடை பகுதியில் கஞ்சா விற்பனையை தடுக்கக் கோரி, மக்கள் நீதி மய்யம் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மதுரை அருகே ஒத்தக்கடை பகுதியில் சட்டவிரோதமாக நடந்துவரும் கஞ்சா விற்பனை, மதுபானக் கடைகளில் 24 மணி நேரமும் மதுபாட்டில் விற்பனை, நியாயவிலைக் கடைகளில் அனைத்துப் பொருள்களும் எடை குறைவாக விநியோகம் ஆகியவற்றை தடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மதுரை மண்டலம் மாநிலச் செயலா் எம். அழகா் தலைமை வகித்தாா். இதில், மதுரை கிழக்கு மாவட்டச் செயலா் க. கதிரேசன் முன்னிலை வகித்தாா். மக்கள் நீதி மய்யம் கட்சியின் மதுரை மாவட்டச் செயலா்கள், நகர, ஒன்றியச் செயலா்கள், உறுப்பினா்கள் பங்கேற்றனா்.