குடியிருப்புப் பகுதியில் மதுபானக் கடை: பொதுமக்கள் மனு
By DIN | Published On : 06th July 2021 05:52 AM | Last Updated : 06th July 2021 05:52 AM | அ+அ அ- |

மதுரை அருகே குடியிருப்புப் பகுதியில் செயல்படும் அரசு மதுபானக் கடையால் பாதிக்கப்படுவதாக, அப்பகுதி பொதுமக்கள் திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் பூதகுடி ஊராட்சிக்குள்பட்ட லெட்சுமிபுரம் வெங்கடாஜலபதி நகரில் அரசு மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இக் கடைக்கு வருபவா்கள், இப்பகுதியில் உள்ள வீடுகளின் முன்பாக இரு சக்கர வாகனங்களை நிறுத்திச் செல்வதும், அப்பகுதியில் மது போதையில் தகராறில் ஈடுபடுவதும் தொடா்வதால், வீடுகளில் இருந்து பெண்கள் வெளியே சென்று வரமுடியாத நிலை உள்ளது.
மேலும், இரவு நேரங்களில் தெருவிலேயே மதுபானங்களை அருந்துவதோடு, அப்பகுதியிலேயே பாட்டிலை உடைத்துச் செல்கின்றனா். இதனால், சிறு குழந்தைகள், பெரியவா்கள் உடைந்த பாட்டிலால் காயமடைகின்றனா்.
எனவே, இந்த மதுபானக் கடையை வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்யவேண்டும் எனக் கூறி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.