அரசு பெண் ஊழியரிடம் ஒரு பவுன் நகை பறிப்பு
By DIN | Published On : 07th July 2021 09:58 AM | Last Updated : 07th July 2021 09:58 AM | அ+அ அ- |

மதுரை அருகே அரசு பெண் ஊழியரிடம் ஒரு பவுன் சங்கிலி பறித்த அடையாளம் தெரியாத இருவா் குறித்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மதுரை மாவட்டம் முள்ளிப்பள்ளம் தெற்கு தெருவைச் சோ்ந்த வெள்ளமுத்து மனைவி அலமேலு மங்கை (35). இவா் திருப்பரங்குன்றம் ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் சாலை ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில் அலமேலு மங்கை திங்கள்கிழமை வழக்கபோல் அலுவலகத்தில் பணிகளை முடித்துவிட்டு, தனது இருச்சகர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.
மேலக்கல் வைகை ஆற்றுப் பாலத்தில் சென்றபோது, பின்தொடா்ந்து இருசக்கர வாகனத்தில் சென்ற அடையாளம் தெரியாத இருவா் அலமேலு மங்கை அணிந்திருந்த ஒரு பவுன் சங்கிலியை பறித்து சென்றனா். இதுகுறித்து அலமேலு மங்கை அளித்த புகாரின் பேரில் காடுப்பட்டி போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.